அண்மைய செய்திகள்

recent
-

மிகப்பெரிய விண்வெளி இரகசியத்தை பல வருடங்களுக்கு பின்னர் வெளியிட்ட சீனா -


சர்வதேச விண்வெளி நிலையத்தினை அமைக்கும் நோக்குடன் முதலாவது விண்வெளி ஓடத்தினை சுமார் 20 வருடங்களாக சீனா உருவாக்கி வருகின்றது.
எனினும் இதுவரை காலமும் இதன் வடிவம் இரகசியமாகவே பேணப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது புகைப்படம் உட்பட மேலும் சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது 55 அடிகள் நீளமானதாகவும், 60 தொன்கள் எடை கொண்டதாகவும் காணப்படுகின்றது.
சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையமானது தற்போது உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தினை விடவும் சிறியதாக இருக்கின்ற போதிலும், அமெரிக்காவிலுள்ள கால்பந்து மைதானங்களை விடவும் பெரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக இப் புதிய நிலையமானது சீனாவுக்கு சொந்தமாக இருக்கின்றபோதிலும், ஐக்கியநாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் கட்டுமாணப் பணிகள் 2022 ஆம் ஆண்டளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மிகப்பெரிய விண்வெளி இரகசியத்தை பல வருடங்களுக்கு பின்னர் வெளியிட்ட சீனா - Reviewed by Author on November 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.