அண்மைய செய்திகள்

recent
-

பாடுகின்றபோது தமிழை தமிழாக உச்சரிக்கப் பாடகர்கள் பழகிக்கொள்ள வேண்டும்.அருட்பணி S.அன்புராசா

நாம் பாடல்கள் கொண்ட இறுவெட்டுக்கள் வெளியீடு செய்யும்பொழுது இனி எமக்கு தென்னிந்திய பாடகர்கள் தேவையில்லை என எம்மில் பலர் நினைக்கலாம். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் இதுவிடயத்தில் கற்றுக்கொள்ள இன்னும் எவ்வளவோ இருக்கின்றது. அத்துடன் தமிழை தமிழாக உச்சரிக்கப் பாடகர்கள் பழகிக்கொள்ள வேண்டும் என அமலமரி தியாகிகளின் சபையின் மறையுரையாளர் அருட்பணி S.அன்புராசா அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

பேசாலை மன்.புனித பத்திமா மத்திய மகா வித்தியாலயத்தில் வியாழக் கிழமை (29.11.2018) கிறிஸ்மஸ் விழாவும் இத்துடன் 'அருளொன்றே போதும்' என்ற கிறிஸ்தவ பாடல்கள் கொண்ட இறுவெட்டு வெளியீடும் விழாவும் நடைபெற்றது. இதில் இறுவெட்டுக்கான ஆய்வுரையை அமல மரி தியாகிகளின் சபையின்
மறையுரையாளர் அருட்பணி S.அன்புராசா அடிகளார் நடாத்தியபோது அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் தற்பொழுது திரு.றொனிற்றன் பச்சேக், திருமதி சின்னராணி பச்சேக் ஆகியோரின் கூட்டு முயற்சியாக இங்கு வெளியீடு செய்யப்பட்டிருக்கும் 'அருளொன்றே போதும்' என்ற இறுவெட்டானது இந்நாள்களில் நமது பிரதேசங்களில் வெளியிடப்பட்ட இறுவட்டுக்களில் இது மிக சிறந்ததொன்றாக இருக்கின்றது.
சில இறுவெட்டுக்களுக்கு பாடல்வரிகள் நன்றாக இருக்கும். இன்னும்
சிலவற்றுக்கு இராகத் தேர்வு சிறப்பாக இருக்கும். வேறு சிலவற்றுக்கு
இசையமைப்பு அழகாக அமையும்.

ஆனால் 'அருளொன்றே போதும்' என்ற இவ் இறுவட்டில் பெரும்பாலான பாடல்களுக்கு குறிப்பாக மெட்டுக்கள், இசையமைப்பு எல்லாமே மிகபொருத்தமாகப் பொருந்தி வந்திருப்பது பாராட்டுதலுக்குரியது.

மேலும் வழிபாட்டுப் பாடல்களாக இவை வருகின்றன எனச் சொல்லப்பட்டாலும் விசேட விதமாக ஆற்றுப்படுத்தும் தன்மை கொண்டவையாக இருப்பது இவ் இறுவட்டின்
மேலதிக சிறப்பு எனலாம். இப்பொழுது தென்னிந்தியப் பாடகர்கள் இனித் தேவையில்லை என கூறுபவர்கள் எம்மத்தியில் பலர் இருக்கின்றார்கள். இவ் கருத்தினை என்னை பொறுத்தமட்டில் நான் ஏற்றுக் கொள்வதற்கு இல்லை. ஏனென்றால் அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள இன்னும் ஏராளமானவை உண்டு.

மேலும் இறையியல் கருத்துக்கள் விரவியும் பரவியும் இவ் பாடல்களில்
கிடக்கிறது. அதாவது 'அன்புக் கடவுள் உம்மை அகன்றேன். அடுத்து இருப்பவரை வெறுத்தேன், ஏழை எளியவரைத் தவிர்த்தேன். பசித்த லாசரையும் மறந்தேன். கறையோடு பலி தினம் தந்தேன். காயினைப் போலவே நின்றேன். இவ்வாறு இவ் பாடல்களில் வருகின்றன. இவைகள் எல்லாம் ஒவ்வொருவருக்கும் உள்ளத்தைத் தொடும் வார்த்தைகளாக இருப்பதையும் காணலாம். நிறைவாக, சில குறிப்புக்களைச் சொல்லி நிறைவு செய்ய விரும்புகின்றேன்.

இவ் இறுவட்டிற்கு உன்னருளொன்றே போதும்! 'எனப் பெயரிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம். மேலும் தமிழை தமிழாக உச்சரிக்கப் பாடகர்கள் பழகிக்கொள்ள வேண்டும். உதாரணமாக நத்தார் காலத்தில் பாடப்படும் பாடலான'வானம் விட்டு பூமி வந்த பாலன்'எடுத்துக் கொள்ளலாம். இவ் வரியில் 'பூமியை பூமியாகவும் 'பாலன்'என்ற சொல்லினைப் பாலனாகவும் உச்சரிக்க வேண்டும். அதாவது பொதுத் தமிழ் உச்சரிப்பைக் கைக்கொள்ள வேண்டும் - கடைப்பிடிக்க வேண்டும். வேற்று மொழி கலந்த உச்சரிப்பை தமிழ் உச்சரிப்புக்குள் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.


பாடுகின்றபோது தமிழை தமிழாக உச்சரிக்கப் பாடகர்கள் பழகிக்கொள்ள வேண்டும்.அருட்பணி S.அன்புராசா Reviewed by Author on December 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.