அண்மைய செய்திகள்

recent
-

ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை கிரிக்கெட்டில் களம் காணும் முக்கிய வீரர் -


இளம் டெஸ்ட் அணித்தலைவர் என்ற சாதனையை நிகழ்த்திய முன்னாள் ஜிம்பாப்வே வீரர் ததேந்தா தைபூ இலங்கை உள்நாட்டு கிரிக்கெட் அணிக்காக களம் காண உள்ளார்.
இலங்கை உள்நாட்டு கிரிக்கெட்டில் பதுராலியா கிரிக்கெட் கிளப்புக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பியுள்ளார் ததேந்தா தைபூ.

உலகின் இளம் டெஸ்ட் அணித்தலைவர் என்ற சாதனையை வைத்துள்ள தைபூ 11 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் 28 டெஸ்ட் போட்டிகள் 150 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆடியுள்ளார்.
இவர் மகன் இவரது ஆட்டத்தைப் பார்த்ததேயில்லை என்பதற்காகவே மீண்டும் கிரிக்கெட்டுக்குள் நுழைய முடிவெடுத்துள்ளார் தைபூ.
தைபூ ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென். 28 டெஸ்ட் போட்டிகளில் 1546 ஓட்டங்களை 30.31 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார்,
அதிகபட்ச ஸ்கோர் 153. ஒருசதம் 12 அரைசதம் எடுத்துள்ளார். 57 கேட்ச்கள் 5 ஸ்டம்பிங்.

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 150 ஆட்டங்களில் 3,393 ஓட்டங்களை 29.25 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.
2 சதங்கள் 22 அரைசதங்கள், அதிகபட்ச ஸ்கோர் 107. இதில் 114 கேட்ச்கள் 33 ஸ்டம்பிங்குகளைச் செய்துள்ளார். 17 டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 259 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

தைபூ ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தேவாலய திருப்பணிகளுக்காக கிரிக்கெட்டிலிருந்து தனது 29வது வயதில் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை கிரிக்கெட்டில் களம் காணும் முக்கிய வீரர் - Reviewed by Author on December 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.