அண்மைய செய்திகள்

recent
-

இமயமலை தொடர்பில் விஞ்ஞானிகள் வெளியிட்ட பகீர் எச்சரிக்கை -


இமயமலைப் பகுதியில் 8.5 என்ற ரிக்டர் அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஜவகர்லால் நேரு விஞ்ஞான ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர் சி.பி. ராஜேந்திரன்,

அகமதாபாத் விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த கே.எம்.ஸ்ரீஜித் மற்றும் டெல்லியின் தேசிய புவியியல் ஆய்வு மையத்தை சேர்ந்த வினீத் கஹலாட் ஆகியோர் தனித்தனியாக மேற்கொண்ட ஆய்வில் இமயமலைப் பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட வரைபடத்தை பின்பற்றி, ஆய்வு மேற்கொண்ட கூகுள் எர்த் மற்றும் இஸ்ரோவின் கார்டோசாட் 1 செயற்கைக் கோளும் இந்த எச்சரிக்கையை ஆமோதித்துள்ளன.
இதனால் நேபாள - இந்திய எல்லை பகுதியில் இமயமலை 15 மீற்றர் வரை சரிய வாய்ப்புள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இமயமலை தொடர்பில் விஞ்ஞானிகள் வெளியிட்ட பகீர் எச்சரிக்கை - Reviewed by Author on December 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.