அண்மைய செய்திகள்

recent
-

வாயில் பாக்டீரியாக்கள் அதிகரித்தால் இவ்வளவு பிரச்சனை வருமா?


உடல் ஆரோக்கியத்தில் வாய் ஆரோக்கியமும் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒருவரது உடலினுள் பாக்டீரியாக்கள் வைரஸ்கள் போன்றவை வாயின் வழியே எளிதில் நுழையும்.

இப்படி வாயின் வழியே நுழையும் கிருமிகள் உடலின் இதர உறுப்புக்களை பாதித்து பெரும் பாதிப்பை உண்டாக்கும்.
வாயில் பாக்டீரியாக்கள் அதிகரித்தால் என்ன ஆகும்?
  • வாயில் ஏற்படும் நோய்கள் தீவிரமானால் நோய்களை உண்டாக்கிய கிருமிகள் நேரடியாக நுரையீரல், இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளை அடைந்து பல பிரச்சனைகள் உண்டாக்கிவிடும்.
  • மேலும் இதய நோய், பாக்டீரியல் நிமோனியா, சர்ச்சரை நோய் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். எனவே தான் வாயின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்று கூறுகின்றனர்.
வாயில் உள்ள பாக்டீரியாக்களை நீக்குவது எப்படி?
  • தினமும் காலையில் எழுந்ததும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை வாயில் விட்டு 10 நிமிடம் கொப்பளியுங்கள். இப்படி தினமும் தவறாமல் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.
  • வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும், ஆன்டி-பாக்டீரியல் ஏஜென்ட்டுகள் மற்றும் வேப்பம், அதிமதுரம், யூகலிப்டஸ், கிராம்பு, புதினா போன்றவை நிறைந்த நேச்சுரல் டூத் பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள்.
  • தினமும் பற்களைத் துலக்கும் போது மறக்காமல் நாக்கை சுத்தம் செய்யுங்கள். இப்படி சுத்தம் செய்வதால் வாய் சுத்தமாக இருப்பதோடு சுவாசமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
  • தினமும் சற்று புளிக்க வைத்த தயிரை உட்கொண்டு வந்தால் அது வாயில் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரித்து கெட்ட பாக்டீரியாக்களின் அளவை எதிர்த்துப் போராடி வாயில் ஏற்படும் தொற்றுக்களைத் தடுக்கும்.
  • வேப்பிலை எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால் வேப்பிலை எண்ணெயை ஈறுகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வாயைக் எழுவுங்கள்.
  • க்ரீன் டீயை தினமும் குடித்து வருபவர்களின் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, பல்லைச் சுற்றி ஏற்படும் நோயின் அபாயம் குறைவதாக தெரிய வந்துள்ளது. எனவே உங்கள் வாய் ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் இருக்க நினைத்தால், க்ரீன் டீயை தினமும் குடியுங்கள்.
  • டீ-ட்ரீ ஆயில் பல் ஈறு அழற்சி மற்றும் ஈறுகளில் உள்ள இரத்தக்கசிவைக் குறைக்கும் என தெரிய வந்துள்ளது. ஆகவே வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால் இந்த எண்ணெயை அன்றாடம் தவறாமல் பயன்படுத்துங்கள்.
வாயில் பாக்டீரியாக்கள் அதிகரித்தால் இவ்வளவு பிரச்சனை வருமா? Reviewed by Author on December 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.