அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சு: உலகளவில் நம்பர் 1 இடத்தில் இலங்கை வீரர் -


சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் சிறந்த பந்துவீச்சு கணக்கை இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமீந்தா வாஸ் வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதி இலங்கை - ஜிம்பாப்வே அணிகள் மோதிய போட்டியில் சமீந்தா வாஸ் 8 ஓவர்கள் வீசி வெறும் 19 ஓட்டங்களை மட்டும் விட்டு கொடுத்து 8 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதில் 3 மெய்டின் ஓவர்கள் என்பது கூடுதல் சிறப்பாகும்.
இந்த பட்டியலில் பாகிஸ்தான் முன்னாள் ஆல் ரவுண்டர் அப்ரிடி 2வது இடத்தில் உள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் திகதி பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இதில் அப்ரிடி 9 ஓவர்கள் பந்து வீசி 12 ஓட்டங்களை விட்டு கொடுத்து 7 விக்கெட்களை எடுத்தார்.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் அவுஸ்திரேலிய ஜாம்பவான் மெக்ராத் உள்ளார்.
கடந்த 2003ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் திகதி நமீபியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா விளையாடியது.
இப்போட்டியில், மெக்ராத் 7 ஓவர்கள் வீசி 15 ஓட்டங்களை விட்டு கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தினார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சு: உலகளவில் நம்பர் 1 இடத்தில் இலங்கை வீரர் - Reviewed by Author on January 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.