அண்மைய செய்திகள்

recent
-

நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வரும் வெண்டைக்காய்.. இப்படி சாப்பிடுங்க -


வெண்டைக்காய் வழவழப்புத்தன்மை கொண்டதால் நம்மில் பலருக்கு பிடிக்காத காயாக இருக்கிறது. உண்மையில் வெண்டைக்காயில் எண்ணற்ற மருத்துவப்பயன்கள் நிறைந்து காணப்படுகின்றது.
இதில் வைட்டமின்கள் (ஏ, பி, சி, ஈ மற்றும் கே), கனிமங்கள், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் வளமையாக உள்ளது.

வெண்டைக்காயை பச்சையாக சாப்பிடுவதை விட நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் நமது உடலுக்கு பல்வேறு நன்மை தருகின்றது.
அந்தவகையில் நீரிழிவில் டைப்-2 நீரிழிவு சிறுநீரகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த வகையான நீரிழிவு இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதோடு, சிறுநீரகத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வெண்டைக்காயை சாப்பிட்டால், சிறுநீரகத்தில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.

வெண்டைக்காயில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால் இதனை அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதோடு, வயிறும் நிறைந்துவிடும்.

மேலும் வெண்டைக்காயில் எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ள உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
ஏனெனில் இந்த சத்து உடலில் இருக்கும் கார்போஹைட்ரேட்டின் செரிமான நேரத்தை குறைத்து, அவை இரத்தத்தில் கலக்காமல் தடுக்கிறது. இத்தகைய சத்து வெண்டைக்காயில் அதிகம் உள்ளது.
தற்போது வெண்டைக்காயை வைத்து நீரிழிவு நோயை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்று பார்ப்போம்.
தேவையானவை
  • வெண்டைக்காய் - 2 துண்டு
  • ஒரு டம்ளர் நீர்
செய்முறை
முதலில் இரண்டு வெண்டைக்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதன் இரு முனைகளையும் நீக்கிவிட வேண்டும்.
முனைகளை நறுக்கியப்பின் அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் வரும். அப்போது அதனை கழுவிடாமல், ஒரு டம்ளர் நீரில் அந்த துண்டுகளை போட்டு, இரவில் படுக்கும் முன்பு ஊற வைத்து, மறக்காமல் மூடிவிட வேண்டும்.
பின் காலையில் எழுந்து, அந்த துண்டுகளை நீக்கி, அந்த நீரை குடிக்க வேண்டும்.
இதனை தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும்.
வெண்டைக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, இவ்வாறு சாப்பிடுவது தான், சிறந்த பலனைத் தரும்.

நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வரும் வெண்டைக்காய்.. இப்படி சாப்பிடுங்க - Reviewed by Author on January 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.