அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தேனீ வளர்ப்புக்கான நடவடிக்கைகளை விவசாய திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது- S.A.லெம்பேட்

 மன்னார் மாவட்டத்தில் தேனீ வளப்ப்பு சங்கங்கங்கள் உருவாக்கப்பட்டு வருவதுடன் பொழுது போக்காகமட்டுமல்ல பெருந்தொகை வருமானத்தை ஈட்டித்தரும் ஒரு தொழிலாகவும் தேனீ வளர்ப்புக்கான திட்டத்தை மன்னார் மாவட்ட விவசாய திணைக்களத்தின் தேனீ வளப்பு பிரிவு முன்னெடுத்து வருவதாக விவசாய திணைக்கள பயிர் பாதுகாப்பு, தேனீ வளர்ப்புக்கு பொறுப்பதிகாரி  விவசாயப் பாடவித உத்தியோகத்தர் எஸ்.ஏ.லெம்பேட் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்குடன் மன்னாh
மாவட்டத்தின் உயிலங்குளம் விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற
கூட்டத்தில் பேசாலை, உயிலங்குளம், தாராபுரம், பரப்பாங்கண்டல்,முருங்கன்
ஆகிய இடங்களிலுள்ள தேனீ வளப்பில் ஈடுபட இருப்போர் மத்தியிலே தேனீ
வளர்ப்புக்கு பொறுப்பதிகாரி  விவசாயப் பாடவித உத்தியோகத்தர்
எஸ்.ஏ.லெம்பேட் இவ்வாறு தெரிவத்தார்.

 தொடர்ந்து உரையாற்றுகையில்

தேனீ வளர்ப்புத் திட்டமானது கடந்த காலத்தில் மன்னார் மாவட்டத்தில்
மிகவும் அருகிய நிலையிலேயே காணப்பட்டு வந்தன. ஆனால் 2015 ஆண்டுக்கு பிற்பாடு தேனீ வளர்ப்பின் மகத்துவம் இதற்கான
விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்பொழுது உலக நாட்டிலே
தேனீ வளர்ப்புக்கு முக்கியம் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்திலும் தேனீ வளர்ப்புக்கு எமது
திணைக்களம் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றது. இதற்கமைய நாங்கள் 2005 லிருந்து 2018 வரைக்கும் தேனீ வளர்ப்புக்காக  வருடந்தோறும் நூறு தேனீ
வளர்ப்புக்கான பெட்டிகள் வழங்கி வந்துள்ளோம். அதாவது ஒரு நபருக்கு ஒரு
பெட்டித் தொடக்கம் ஐந்து பெட்டிகள் வரை வழங்கி வந்துள்ளோம்.

நாங்கள் இவ் திட்டத்தை மாகாண சபை ஒதுக்கீடு நிதியிலிருந்தும் அத்துடன்
மத்திய அரசாங்கத்தின்  தேசிய உணவு திட்டத்தின் கீழும் தற்பொழுது தேனீ
வளர்ப்புக்காக பெட்டிகள் வழங்கி வருகின்றோம்.

நாங்கள் இவ் திட்டத்தை இலவசமாகவும் மானிய அடிப்படையிலும் இவ் திட்டத்தைமுன்னெடுத்து வருகின்றோம். இப்பொழுது எமது திணைக்களம் மன்னார்மாவட்டத்தில் தேனீ வளர்ப்பு சங்கங்களையும் உருவாக்கிக் கொண்டு
வருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் பாலம்பிட்டி, தட்டசனாமடு, கீரிச்சுட்டான் போன்ற
இடங்களில் இவ் சங்கங்கங்கள் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளன.

தேனீ வளர்ப்பானது எம்மில் சிலருக்கு ஒரு பொழுதுபோக்காகவும் இருக்கலாம். ஆனால் இது ஒரு பொழுது போக்குமட்டுமல்ல இலாபம் ஈட்டக்கூடிய ஒரு தொழிலாகவும் அமைகின்றது.

தேனீ வளர்ப்புக்கு வீட்டில் பெட்டியை வைத்துவிட்டோம் என்பது முக்கியமல்ல இவ் பெட்டிகளை பராமரிப்பதிலே மிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
ஆகவேதான் தேனீ வளர்ப்புக்கு பெட்டிகளை எப்படி வைப்பது எப்படி பராமரிப்பது என்பதை தேனீ வளர்ப்பில் ஆர்வம் கொண்டுள்ள உங்களுக்கு இவ்வாறான போதனை பயிற்சிகளுடன் தேனீ வளர்க்கப்படும் இடத்தில் நடைமுறை பயிச்சிகளையும் வழங்குவதற்காகவே இவ்வாறான நிகழ்வுகளை உங்களுக்கு எமது விவசாய திணைக்களம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஆகவே தேனீ வளர்ப்பை எப்படி ஸ்தாபிப்பது, எப்படி பராமரிப்பது, எப்படி
உற்பத்தியை பெருக்குவது என்பது இந்த நிகழ்வின் நோக்கமாக இருக்கின்றது
என்றார்.








மன்னாரில் தேனீ வளர்ப்புக்கான நடவடிக்கைகளை விவசாய திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது- S.A.லெம்பேட் Reviewed by Author on February 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.