அண்மைய செய்திகள்

recent
-

சிலாவத்துறை மக்களின் காணியை கடற்படையினர் விடுவிக்கக்கோரி பிரதேச சபைகளில் பிரேரனைகள் கொண்டுவரப்படும் .

மன்னார் சிலாவத்துறை மக்களின் பூர்வீக காணியிலிருந்து கடற்படையினர்
வெளியேற வேண்டும் என்ற ஒரு பிரேரனையை கொண்டு வந்து அவற்றை ஐனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என நான்கு பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்களும்  கருத்துக்கள் வெளியிட்டுள்ளனர்.

மன்னார் சிலாவத்துறை மக்களின் நில விடுவிப்பதற்கான தொடர் போராட்டம்
நேற்று செவ்வாய் கிழமை (26.02.2019) ஏழாவது நாட்களாக சிலாவத்துறை கடற்படை முகாமுக்கு முன்னால் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இவ் போராட்டத்தின்போது நேற்றைய முன்தினம் 25-02-2019 முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்கள் அலிகான் ஷரீப், றிப்கான பதியுதீன் மற்றும் மன்னார்,நானாட்டான், மாந்தை மேற்கு மற்றும் முசலி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உட்பட பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் இவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவுகளை வழங்கினர்.

இங்கு பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கருத்து
தெரிவிக்கையில் எதிர்வரும் தங்கள் பிரதேச சபை கூட்டங்களில் சிலாவத்துறை கடற்படையினர் சிலாவத்துறை மக்களின் பூர்வீக காணியை விட்டுக் கொடுத்து அவ் மக்கள் அதில் மீள்குடியேற வழி செய்ய வேண்டும் என்ற பிரேரனையை கொண்டு வந்து அவற்றை ஐனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தனர்.

1990 ஆம் ஆண்டு இவ் பகுதி மக்கள் இடம்பெயர்ந்த பின் கடற்படையினர் மக்கள் குடியிருந்த 36 ஏக்கர் காணியை தங்கள் வசம் வைத்துக் கொண்டு மக்களைஅவர்களின் சொந்த இடத்தில் மீள்குடியேற விடாது இருப்பதைத் தொடர்ந்தே இவ் காணி மீட்பு தொடர் போராட்டம் ஏழாவது நாட்களாக சிலாவத்துறை முகாமுக்கு முன்னால் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.






சிலாவத்துறை மக்களின் காணியை கடற்படையினர் விடுவிக்கக்கோரி பிரதேச சபைகளில் பிரேரனைகள் கொண்டுவரப்படும் . Reviewed by Author on February 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.