அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா வடக்கு வலயம் 6 பதக்கங்களைப் பெற்று வடமாகாணத்தில் முதலாம் இடம் -


வவுனியா வடக்கு கல்வி வலயம் ஒரு தங்கப்பதக்கத்தையும் ஒரு வெள்ளிப்பதக்கம், நான்கு வெண்கலப்பதக்கம், என மொத்தமாக 06 பதக்கங்களைப் பெற்று வடமாகாணத்தில் முதலிடத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.

கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் 2018ஆம் ஆண்டிற்கான செயற்பாட்டு மகிழ்வோம் தேசியப் போட்டியில் வவுனியா வடக்கு கல்வி வலயம் தேசிய சாதனைகளை ஈட்டியுள்ளது.

வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயம் தரம் 05 கலவன் அணியில் 72 அணிகள் பங்குபற்றியதில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டு தங்கப்பதக்கத்தினை தனதாக்கிக்கொண்டது.
தரம் 04 கலவன் அணியில் 72 அணிகள் பங்குபற்றியதில் தேசிய ரீதியில் இருபதாம் இடத்தையும் தனதாக்கி வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டது. தரம் 03 அணியில் 72 அணிகள் பங்குபற்றியதில் வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டது.

வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயம் தரம் 03 ஆண்கள் அணியில் வெண்கலப்பதக்கத்தையும் தரம் 04 பெண்கள் அணியில் வெண்கலப்பதக்கத்தையும் தனதாக்கியது.
வவுனியா ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயம் தரம் 05 ஆண்கள் அணியில் வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றுள்ளது.
அத்துடன் வரலாற்றுச்சாதனை படைத்த வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் தேசிய சாதனை புரிந்த மாணவர்களுக்கான சாதனையாளர் கௌரவிப்பு விழா நேற்று 12.03.2019 பாடசாலையின் அதிபர் கோ. குலேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.
வவுனியா வடக்கு கல்விப்பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு மணவர்களுக்கு பதக்கங்களை அணிவித்து கௌரவித்தார்.

இந்நிகழ்வில் கேட்டக்கல்வி அதிகாரி ஆசிரிய வள நிலைய முகாமையாளர், உதவிக்கல்விப்பணிப்பாளர் ஆரம்பக்கல்வி, செயற்பட்டு மகிழ்வோம் இணைப்பாளர் இ.பகீரதன், ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
வவுனியா வடக்கு வலயம் 6 பதக்கங்களைப் பெற்று வடமாகாணத்தில் முதலாம் இடம் - Reviewed by Author on March 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.