அண்மைய செய்திகள்

recent
-

இரணைதீவு மக்களின் பிரச்சினை-மனித உரிமை ஆணைக்குழு திடீர் விஜயம்-


கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட இரணைதீவு பகுதியில் குடியேறியுள்ள மக்கள் தொடர்பாகவும் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் நேரடியாக அறிந்து கொள்வதற்காக யாழ் மற்றும் கிளிநொச்சி பிராந்திய மனித உரிமை ஆணைகுழுவின் ஆணையாளர் திரு.கணகராஜ் தலைமையிலான அதிகாரிகள் 01-03-2019 காலை 10 மணியளவில் இரணைமாதா நகரில் இருந்து படகு மூலம் இரணைதீவிற்க்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம்(மெசிடோ) ஊடகா மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு மற்றும் ஊடகங்களின் மூலம் அறிக்கையிடப்பட்ட செய்திகளின் அடிப்படையில் இரணைதீவு மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின்னர் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காகவும் மக்கள் ஊடக நேரடியான முறைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்காகவும் குறித்த குழுவானது விஜயத்தை மேற்கொண்டிருந்தது

குறித்த விஜயத்தின் போது மக்கள் நேரடியாக தங்களுடைய முறைப்பாடுகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளின் முன்னிலையில் தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக இரணைதீவு பகுதியில் குடியேறி ஒருவருடம் ஆக போகின்ற நிலையில் இதுவரை தாங்கள் ஒழுங்கான முறையில் இன்னமும் குடியேற்றப்படவில்லை எனவும் உரிய அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயல்படுவதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன் அரச அரச திணைக்கள அதிகாரிகள் தமது தீவுக்கு வருவது மிக குறைவும் எனவும் எம் பிரச்சினைகள் தொடர்பாக அறிந்து கொள்வது கூட இல்லை எனவும் கவலையுடன் தெரிவித்தனர்

தங்களுக்கு கிடைக்கும் சமூர்த்தி பணம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை கூட அதிகாரிகள் எமது பகுதிகளில் வழங்குவதில்லை எனவும் அவ் சிறிய தொகை பணத்தை பெறுவதற்கு கூட தாங்கள் 14 மைல் தூரம் கடலில் பயணித்து இரணைமாத நகரில் பெறவேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் குடிநீர் பெறுவதற்காக தங்கள் தினமும் 5 கிலோமீற்றர் நடந்து செல்ல வேண்டிய நிலைகாணப்படுவதாகவும் அதே நேரத்தில் தங்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் மருத்துவ தேவைகளையும் உடனடியாக பெற்று தருவதற்கான செயற்பாடுகளையும் மேற்கொண்டு தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்

இந்த நிலையில் குறித்த மக்களின் வீடுகள் கோவில்  பாடசலைகள் அணைத்திற்கும் நேரடியாக விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த

யாழ்பாணம் மற்றும் கிளிநொச்சி பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் இரணைதீவு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்ககைகள் மேற்கொண்டு சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களை அழைத்து அவர்களிடம் விளக்கம் கோரவுள்ளதாகவும் அந்த விளக்கத்தின் பின்னர் அவர்களுடைய செயற்பாடுகளை முன்னேடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும்.

 மேலும் இவ்வருடத்திற்குள் சகல அரச திணைக்களங்களையும் ஒரு நடமாடும் சேவைக்கு அழைத்து இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை நேரடியாக ஆராய்வதற்கும் திட்டம் ஒன்றை தயாரித்துள்ளதாகவும் தெரிவுதுள்ளார்.

அத்துடன் இது ஒரு இலங்கை தீவு அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளது ஆகவே ஏனைய பிரதேசத்தில் மீள்குடியேரிய மக்களுக்கு கிடைக்ககூடிய சகல உரிமைகளும் சகல வசதிகளும் இந்த மக்களை சென்றடைய வேண்டும். ஆகவே மீள்குடியேற்றம் தொடர்பில் எடுக்கவேண்டிய சகல நடவடிக்கை தொடர்பிலும் மனித உரிமை குழு கவனம் செலுத்தும் என தெரிவித்தார்.
















V.KAJENTHIRAN-

இரணைதீவு மக்களின் பிரச்சினை-மனித உரிமை ஆணைக்குழு திடீர் விஜயம்- Reviewed by Author on March 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.