அண்மைய செய்திகள்

recent
-

மதம் கடந்த மனிதம் வேண்டும் மன்னாரில்.

கட்டமைக்கப்பட்ட சுய ஒழுக்க நெறியை மரவு சார் கலாசார பாரம்பரிய விழுமியத்துடன் பின்பற்றுவதே சமய நெறி முறை ஆகும்.
அவரவர் தத்தமது மதத்தை பின் பற்றுவதும் விசுவசிப்பதும் சுய விருப்பிலானது. 
அது மற்றவர்களுக்கு பாதகமில்லாமல் அமையவேண்டும். என்பதே பண்பாட்டியல் கேட்பாடாகும்.

மன்னாரில்  மனிதத்தை விட மதத்திற்கு முக்கியத்துவமளிப்பது  மிகுந்த வேதனையே  உணர்வடிமைக்குள் சிக்குண்டு  அறிவுக்கண்களை மூட முயல்வது ஆரோக்கியமன்று . தமிழர்கள் தேசியத்தைக்கடந்து சமயத்துக்குள் பிளவுபடுவது பொது எதிரிக்கு வாய்ப்பை ஏற்படுத்தி விடும். இதனை சமயத்தலைவர்கள் நன்கு உணர்ந்து கொள்ள  வேண்டும். ஆகவே திருக்கேதிஸ்வரச் சம்பவம் ஏற்புடையதன்று .வன்முறை நீதியை நிலைநாட்டவல்லதல்ல  மேலும் சமூக பிறழ்வை கூட்டு வன்முறைக்கு தூபமிடும். என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
முரன்பாடுகள் ஏற்படுவது  இயல்பானதே  அதை  சமப்படுத்துவதற்கு ஆரோக்கியமான இதயபூர்வமான கலந்துரையாடல் மேற் கொள்வதே சாலச் சிறந்தது.
சமூக ஊடகங்கள் பெரு வளர்ச்சி  பெற்று விட்ட நிலையில் பொது வெளியில்  சட்டத்தை தம்வசப்படுத்தி  அசாதாரண சூழ்நிலை யை ஏற்படுத்துவது அறிவுபூர்வமான முன்னகர்வாக அமைந்துவிடாது.
ஆகவே  சம்மந்தப்பட்டவர்கள் பொது வெளி நாகரீகத்தை கருதி பக்குவமாக வார்த்தைகளை பேசி உரிய அனுகு முறைகளை மேற்கொள்ளவேண்டும். அதுவே மத நிந்தனை.

எனவே மதம் எனும் சிறைக்குள் யாரும் சிக்குண்டு விடாதீர்கள். மனிதத்துவம்  ஐக்கியப்பட நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டியதே அவசியமாகும்.ஒரு சிலரின் அர்ப்பத்தனமான செயற்பாட்டிற்காக ஒரு சமூகத்தை முழுமையாக குற்றம் சாட்டுவது முறையல்ல  அடிப்படை வகுப்பு வாத சிந்தனைகள் களையப்பட வேண்டும்.என்பதுடன்
எதிர்காலத்தில் வன்முறையற்ற புரிந்துணர்வை ஏற்படுத்த முரண்பட்ட தரப்புக்கள் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.
-நன்றி-

மதம் கடந்த மனிதம் வேண்டும் மன்னாரில். Reviewed by Author on March 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.