அண்மைய செய்திகள்

recent
-

உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் 7 வது உலகக்கிண்ணப் போட்டிகள் 2019 -


உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் 7 வது உலகக்கிண்ணப் போட்டிகள் நோர்வேயின் ஒஸ்லோ நகரில் மிக சிறப்பாக கடந்த சனி ஞாயிறு (20,21 April 2019) இரு தினங்களாக நடைபெற்று முடிந்திருக்கிறது.
20.04.2019 காலை 07.00 மணிக்கு அகவணக்கம், கவிஞர் அகளங்கன் அவர்களின் தமிழ்தாய் வாழ்த்து பாடல், மற்றும் மங்கல விளக்கேற்றலுடன் இப்போட்டிகள் ஆரம்பமாகியன.

இப் போட்டியில் உலகின் 15க்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் வருகை தந்து சிறப்பித்திருந்தார்கள்.

கனடா, சவுதி அரேபியா, அவுஸ்திரேலியா, இலங்கை, ஐரோப்பிய நாடுகளிலிருந்து கலந்து கொண்டிருந்தார்கள். குறிப்பாக பிரித்தானியா, கனடா, நோர்வேயிலிருந்து பெருமளவான போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
ஆரம்ப நாள் நிகழ்வில் உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் சார்பாக ஸ்தாபகர் திரு கந்தையா சிங்கம் (சுவிஸ்), பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் திரு. Roman Poches (சுவிஸ்), தலைவர் திரு தங்கராசா சிவஸ்ரீ பிரான்ஸ், செயலாளர் திரு.ரமேஷ் விநாயகம் (நோர்வே), துணைச் செயலாளர் திரு.சஞ்சஜன் செல்வமாணிக்கம் (நோர்வே), பொருளாளர் திரு.தில்லைறாஜ் சகாதேவன் (சுவிஸ்), WTBF Directeor of development திரு.அன்ரனி ஜெயக்காந் (கனடா ), WTBF Directeor of marketing திரு. மகேன் வாகீசன் (கனடா) இவ்வாண்டு உலகக் கிண்ண நிர்வாக அமைப்பின் தலைவர் திரு.சிறீ நவரட்ணம் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

இறுதி நாள் நிகழ்வில் ஒஸ்லோ பிராந்திய பட்மின்ரன் தலைவர் திரு.Terje Fjerldal அவர்களும் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
போட்டிகள் யாவும் குறித்த நேர ஒழுங்கில் நடந்தேறியது. போட்டி மைதானம் சிறந்த தரத்தில் அமைந்திருந்ததுடன் 16 திடல்களில் ஒரே நேரத்திலேயே போட்டிகள் நடைபெற்றுமிருந்தது.

நோர்வே வாழ் தமிழ் மக்களின் பங்களிப்பு மிக சிறப்பாக அமைந்திருந்தது. விசேடமாக நோர்வே தமிழ் சங்கம், Strømmen badminton club ஆகியன காத்திரமான பங்களிப்பை வழங்கி இப்போட்டிகள் சிறப்பாக நடைபெற உதவி இருந்தார்கள்.
இரண்டாம் நாள் நிகழ்வின் போது, உலகக்கிண்ண போட்டி சம்பந்தமாக வெளியிடப்படுகின்ற நினைவுச் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நடைபெற்ற போட்டிகள் யாவும் மிகவும் விறு விறுப்பாகவும் சர்வதேச தரத்திற்கு ஒப்பானதாகும் அமைந்திருந்தது.

போட்டிகள் குறித்த நேர ஒழுங்கில் நடந்தேறியது போட்டிமைதானம் சிறந்த தரத்தில் அமைந்திருந்ததுடன் 16 திடல்களில் ஒரேநேரத்திலேயே போட்டிகள் நடைபெற்றுமிருந்தது.
நடை பெற்ற போட்டியிலே அதிக புள்ளிகளை பெற்று பிரித்தானியா முதல் இடத்தினை பெற்றுக் கொண்டது.

அடுத்த வருடத்திற்கான உலகத் தமிழருக்கான பூப்பந்தாட்டப் போட்டிகள் சுவிட்சர்லாந்து நாட்டில் சித்திரை மாதம் 10, 11ம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஞாயிறு மாலை இராப்போசனத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றது.
WTBT - Ranking 2019 Norway
Girls & boys U11 - Leaves
1 Sajan Senthuran (ENG)
2 Tamilenthi Senthilkumaran (CAN)
3 Akshay Prakash (DEN)
Girls & Boys Doubles U13 - Kids
1 Sajan Senthuran (ENG)
Arthur Kutaan Shanmugaragah (FRA)
2 Lukshan Gnanaranjan (GER)
Tamilenthi Senthilkumaran (CAN)
3 Varshini Manikandan (NOR)
Varun Manikandan (NOR)
MS U13 - Kids
1 Varun Manikandan (NOR)
2 Stephen Mahendrakumaran (ENG)
3 Arthur Kutaan Shanmugaragah (FRA)
WS U15 - Teen
1 Abithya Satchithananthan (DEN)
2 Sangamithra Selvamuthukumaran (KSA)
3 Thaksika Sukumar (ENG)
MS U15 - Teen
1 Agarna Kokilan (NOR)
2 Kanishan Athavnan (SWE)
MD U17 - Youth
1 Kanishan Athavnan (SWE)
Kavin Thas (NOR)
2 Anistan Anthonydas (DEN)
Arkash Prakash (DEN)
WD U17 - Youth
1 Piriyangha Gnanaranjan (GER)
Ghajaayine Senthilkumaran (CAN)
2 Abithya Satchithananthan (DEN)
Sangamithra Selvamuthukumaran (KSA)
3 Pritthika Navaneethan (ENG)
Thaksika Sukumar (ENG)
Girls & Boy Singles U17 - Youth
1 Piriyangha Gnanaranjan (GER)
2 Kavin Thas (NOR)
3 Sinthuya Vijayakumaran (NOR)
WD Over 40 - Seniors
1 Kalpana Stephen (NOR)
Malathy Subramaniam (NOR)
2 Mythily Anthonydas (DEN)
Sugirtha Jeiharan (NOR)
3 Kalaiarassy Kavitha Sakthivadivel (CAN)
Subadarshani Suriyakumaran (CAN)
MD Over 40 - Seniors
1 Antony Benedict (ENG)
Dayal Ramesh (ENG)
2 Murali Karunanithy (ENG)
Kandiah Lengeswarathasan (ENG)
3 Srikanthakumar Sivalingam (ENG)
Saravanan Tendayghabany (ENG)
MS Over 40
1 Mahen Bakeirathan (ENG)
2 Kusan Subramaniam (ENG)
3 Niranchan Nadarajah (CAN)
XD Over 40 - Seniors
1 Kalaiarassy Kavitha Sakthivadivel (CAN)
Antony Jeyakanth Jesuthasan (CAN)
2 Sugirtha Jeiharan (NOR)
Niranchan Nadarajah (CAN)
3 Subadarshani Suriyakumaran (CAN)
Zameer Zahir (CAN)
MD Over 50 - Super Seniors
1 Benedict Nirmalan (ENG)
Darmalingam Rajendran (ENG)
2 Selvasothy Jaya Jayapiragas (ENG)
Vethanayagam Peterpaul (ENG)
3 Antony Jeyakanth Jesuthasan (CAN)
Umapathy Rajaratnam (CAN)
MS Over 50 - Super Seniors
1 Darmalingam Rajendran (ENG)
2 Antony Jeyakanth Jesuthasan (CAN)
3 Chandrakumar Paramsothy (NOR)
MD Over 55 - Ultimate Seniors
1 Tharmalingam Panchalingam (ENG)
Samudram Suriya Surianarayan (ENG)
2 Pat Pushpakanthan (CAN)
Ken Rajasooriar (CAN)
3 Karan Ehamparam (CAN)
Sivakumar Navaratnam (CAN)
MD Open Masters
1 Mangalesh Kanesvaran (ENG)
Vithuran Krishanmoorthy (ENG)
2 Janarthanan Krishnarajah (ENG)
Vinodh Kumar (ENG)
3 Sharvanjan Sivakumar (CAN)
Logeswaran Somasundaram (CAN)
MS Open Masters
1 Keveen Kumar Balasingam (NOR)
2 Pirathipan Uruthirasingham (FRA)
3 Nilojan Thangavel (SRI)
WD Open GOLD
1 Rojini Selladurai (ENG)
Shankari Shannon Sivachandran (CAN)
2 Theepika Jeyarajah (GER)
Thiresha Jeyarajah (GER)
3 Jenny Rajkumar (NOR)
Meera Sivakumaran (ENG)
WS Open GOLD
1 Jenny Rajkumar (NOR)
2 Theepika Jeyarajah (GER)
3 Shankari Shannon Sivachandran (CAN)
MD Open GOLD
1 Athi Selladurai (AUS)
Gohulan Sivakumar (CAN)
2 Viknesh Rajendran (ENG)
Mohammed Shaadhir (SRI)
3 Antoney Raphael St Fernando (DEN)
Yohaannan Banchard Fernando (DEN)
MS Open GOLD
1 Yohaannan Banchard Fernando (DEN)
2 Athi Selladurai (AUS)
3 Bharathkumar Balasingam (NOR)
XD Open GOLD
1 Rojini Selladurai (ENG)
Athi Selladurai (AUS)
2 Jenny Rajkumar (NOR)
Yohaannan Banchard Fernando (DEN)
3 Thiresha Jeyarajah (GER)
Viknesh Rajendran (ENG)




















உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் 7 வது உலகக்கிண்ணப் போட்டிகள் 2019 - Reviewed by Author on April 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.