அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் வழியாக சட்ட பூர்வமற்ற முறையில் இந்தியா செல்ல முயன்ற 04 நைஜீரியா பிரஜைகளுக்கு தலா 25000ரூபா அபராதம்.01வருட கடூழிய சிறை-

குடிவரவு குடியகழ்வு சட்டத்துக்கு மாறாக கடல் மார்க்கமாக இலங்கை பேசாலை கடற்பரப்பிலிருந்து இந்தியாவுக்கு ஒரு படகின் மூலம் சென்று
கொண்டிருந்தபொழுது கைது செய்யப்பட்ட நான்கு நைஜீரியா நாட்டைச்
சேர்ந்தவர்களும் தங்கள் குற்றத்தை ஏற்றுக் கொண்டதால் தலா 25000 ரூபா தண்டனையும் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழியச் சிறைத் தண்டனையும் மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜாவால் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவர்கள் இந்தியாவுக்கு செல்ல உதவி புரிந்ததாக மூன்று இலங்கை பிரஜைகளும் தாங்கள் சுற்றவாளி என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்களுக்கான விசாரனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 31.03.2019 அன்று இரவு இலங்கை மன்னார் பேசாலை கடற்பரப்பிலிருந்து இந்தியாவுக்கு சட்டபூர்வமற்ற முறையில் ஒரு படகின் மூலம் தலைமன்னார் பாக்குநீர் கடற்பரப்பினூடாக சென்ற நான்கு நைஜீரியா பிரஜைகள் தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிசில் ஒப்படைக்கப்படடிருந்தனர்.

இவர்களுடன் பேசாலை உதயபுரத்தைச் சார்ந்த இரு படகோட்டிகளும் கைது
செய்யப்பட்டு மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில்
ஆஐர்படுத்தப்பட்டபோது இவர்கள் ஆறு பேரையும் விளக்க மறியலில் வைக்கப்பட்ட நிலையில் இலங்கை  பிரஜைகளான இருவரும் பின் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவர்களுக்கான வழக்கு நேற்று வியாழக் கிழமை (16.05.2019) மன்னார் மாவட்ட
நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரனைக்கு எடுக்கப்பட்டபோது நான்கு நைஜீரியா பிரஜைகளையும் சிறைச்சாலை அதிகாரிகள் மன்றில்
முன்னிலைப்படுத்தினர்.

அத்துடன் இவர்கள் இந்தியாவுக்கு செல்லுவதற்காக உதவி புரிந்ததாக கூறப்பட்ட இரு படகோட்டிகளும் மன்றில் ஆஐராகியபோது படகு வழங்கியதாக கூறப்பட்ட நபருடன் ஏழு பேர் இவ் வழக்கில் ஆஐராகி இருந்தனர். இவ் வழக்கின்போது நான்கு நைஜீரியா பிரஜைகளும் தங்கள் குற்றங்களை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபா அபராம் விதிக்கப்பட்டதுடன் இவ் பணத்தை செலுத்த தவறின் ஒரு மாதத்துக்கு சாதாரண சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும்

அத்துடன் இவர்களுக்கு ஐந்து வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட
கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர்கள் தங்கள் தண்டப்பணத்தை செலுத்தியபின் இவர்களை மிரிகானாவுக்கு அனுப்பி வைக்குமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன் இவர்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதற்கு உதவியதாக
தெரிவிக்கப்பட்ட இரு படகோட்டிகளும் மற்றும் படகு உரிமையாளரும் தங்கள் குற்றங்களை ஏற்றுக் கொள்ளாமையால் எதிர்வரும் 19.12.2019 வரை விசாரனைக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுந்தேக நபர்கள் சார்பாக சிரேஷ;ட சட்த்தரனி பா.டெனிஸவரன், செல்வராஐ;
டினேஸ் ஆகியோர் ஆஐராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தலைமன்னார் வழியாக சட்ட பூர்வமற்ற முறையில் இந்தியா செல்ல முயன்ற 04 நைஜீரியா பிரஜைகளுக்கு தலா 25000ரூபா அபராதம்.01வருட கடூழிய சிறை- Reviewed by Author on May 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.