அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் 'சதொச' மனித புதை குழி மற்றும் மாந்தை மனித புதை குழி வழக்கு விசாரனைகள் யூலை மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பு- சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன்-படம்

மன்னார் 'சதொச' மனித புதை குழி மற்றும் மாந்தை மனித புதை குழி ஆகிய இரு வழக்கு விசாரனைகளும் மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரனைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த இரு வழக்கு விசாரனைகளையும் எதிர் வரும்  யூலை மாதம் 5 திகதிக்கு நீதவான் ஒத்தி வைத்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மன்றில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.

குறித்த மனிப புதை குழி தொடர்பாக வழக்கு விசாரனைகள் தொடர்பாக அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,

முதலில் மன்னார் நகரப்பகுதியில் உள்ள மன்னார் 'சதொச' மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் (17) விசாரனைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா முன்னிலையில் விசாரனைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு விசாரனைகளின் போது பாதீக்கப்பட்டவர்களின் தரப்பில் அவர்களின் எழுத்து மூல ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டி இருந்தது.

இதன் போது பாதீக்கப்பட்டவர்கள் தரப்பில் எழுத்து மூல ஆவணங்களை சமர்ப்பிக்க முற்பட்ட வேளை ஏற்கனவே கடந்த முறை அழைக்கப்பட்ட நிறுவனங்கள்,பேராசிரியர் ராஜ் சோமதேவ, வைத்தியர்கள் அனைவருடனும் ஏற்கனவே கலந்துரையாடியதன் அடிப்படையில், அவர்களின் ஒன்றினைந்த அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது.

அந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் பாதீக்கப்பட்டவர்கள் சார்பிலான எழுத்து மூல சமர்ப்பணத்தை வழங்குமாறு நீதிமன்றம் எமக்கு வழிகாட்டியது.

அதன் அடிப்படையில் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதன் பிற்பாடு பாதீக்கப்பட்டவர்கள் சார்பாக எமது எழுத்து மூல சமர்ப்பனங்களை அடுத்த தவணையான யூலை மாதம் 5 ஆம் திகதி சமர்ப்பிக்க இருக்கின்றோம்.

மேலும் மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரனைகளும் இன்றைய தினம் (17) இடம் பெற்றது.குறித்த வழக்கு விசாரனையானது கட்டளைக்காக காணப்பட்டது.

ஏற்கனவே அரச சட்டத்தரணிகளினாலும்,பாதீக்கப்பட்ட தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட சமர்ப்பனங்களின் அடிப்படையில் குறித்த கட்டளை எதிர்பார்க்கப்பட்டது.

ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்டு அனுராதபுர வைத்தியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மனித எலும்புகள் தொடர்பிலும், இவை எவ்வாறான பாரிசோதனைக்கு உற்படுத்தப்பட வேண்டும், எங்கு இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்ற விபரங்கள் தேவைக்காக எதிர் பார்க்கப்பட்டுள்ளது.

அந்த கட்டளை இன்று (17) மன்னார் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டிருந்தது.ஏற்கனவே எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இலங்கையில் ஆய்வு செய்யப்பட முடியாது என குற்றப்புலனாய்வு பிரிவினரினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டமைக்கு அமைவாக பாதீக்கப்பட்ட தரப்பினர் சார்பிலும், குற்றப்புலனாய்வு பிரிவினரின் அறிக்கைகளின் படியும் இந்த எச்சங்களையும் மீண்டும் புலோரிடா பீற்றா நிறுவனத்திற்கு அனுப்புமாறு கட்டளை ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

-இதே நேரம் ஏற்கனவே அகழ்வு பணியில் ஈடுபட்ட வைத்தியரட்ன, களனி பல்கலைக்கழக போராசிரியர் ராஜ் சோமதேவ, ஆகியோரின் ஆலோசனையை பெற்று அதற்கான உரிய ஆவணங்களை தயாரிக்குமாறும்,ஏற்கனவே இது சம்மந்தமாக அகழ்வு பணியில் ஈடுபட்ட நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா அவர்களினால் இக்கட்டளை வழங்கப்பட்டிருந்தது.

குறித்த கட்டளையை தற்போதைய மன்னார் நீதவான் ரி.சரவணராஜா அவர்களினால் இன்று வெள்ளிக்கிழமை (17) வாசிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் இவ்விடையம் தொடர்பில் பாதீக்கப்பட்ட தரப்பினருடைய அறிக்கைகளையோ அல்லது அவர்களின் சமர்ப்பனங்களை எதிர்வரும் யூலை மாதம் 5 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு மன்னார் நீதிமன்றம் எங்களுக்க உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது.

இவ் வழங்கு மீண்டும் எதிர்வரும் யூலை மாதம் 5 ஆம் திகதி விசாரனைகளுக்காக எடுத்தக்கொள்ளப்படும் என காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மன்றில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மேலும் தெரிவித்தார்.



மன்னார் 'சதொச' மனித புதை குழி மற்றும் மாந்தை மனித புதை குழி வழக்கு விசாரனைகள் யூலை மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பு- சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன்-படம் Reviewed by Author on May 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.