அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் விவசாயிகள் நவீன முறை நெற் செய்கையிலும் ஈடுபட வேண்டும்-வட மாகாண சபை பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன்.

மன்னார் மாவட்டம் நெற் செய்கையில் கூடிய விளைச்சளைப் பெறுகின்றபோதும் இந்தியாவில் பெறுகின்ற கூடிய விளைச்சளைப் போன்று மன்னார் மாவட்ட விவசாயிகள் நவீன முறையை கையாண்டு குறுகிய நிலத்தில் கூடிய விளைச்சலைப் பெற்று மன்னாருக்கு மேலும் பெருமையை ஈட்ட வேண்டும் என வடக்கு மாகாண சபை பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகத்தின் அனுசரனையுடன் உயிலங்குளம் பகுதியில் மூன்று நாட்கள் விவசாய கண்காட்சியின் இறுதி நாளான கடந்த சனிக்கிழமை (11.05.2019) மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 15 விவசாயிகள் கௌரவிக்கப்பட்டனர்.

இவ் நிகழ்வில் வடக்கு மாகாண சபை பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமார், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் சுக்கூர், மன்னார் உதவிப் பணிப்பாளர் உதயன் உட்பட பலர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இவ் நிகழ்வில் கலந்து கொண்ட வடக்கு மாகாண சபை பிரதம செயலாளர்
ஏ.பத்திநாதன் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகம் மன்னார்
உயிலங்குளம் பகுதியில் மூன்று நாட்கள் விவசாய கண்காட்சியை நடாத்துவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

இவ் கண்காட்சியின்போது இப் பகுதியிலுள்ள விவசாய மக்களையும் இங்கு அழைத்து இப் பகுதியில் விவசாயத்தை ஊக்குவிக்கும் முகமாகவும் சிறந்த விவசாயிகளை கௌரவிப்பதையிட்டும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

எமது மன்னார் மாவட்டத்தின் முதுகு எலும்பாக இருப்பது விவசாயம்.
கட்டுக்கரைக் குளத்தின் கீழ் குறிப்பாக மன்னார் பெரும் நிலப்பரப்பு பகுதி
மக்களின் வாழ்வாதாரம் விவசாயமாக இருக்கின்றது.

நெற் செய்கை அல்லது விவசாயம் என்பது தற்பொழுது வீழ்ச்சி அடைவதாக பலராலும் தெரிவிக்கப்படுகின்றதை அறிகின்றோம். பல்வேறான தொழில்கள் இருக்கின்ற நிலையிலே விவசாயத்தை நம்பி வாழுகின்ற மக்களின்  பொருளாதாரம், வாழ்க்கை தரம் மிகவும் குறைந்து கொண்டு போவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் விவசாயம்தான் மானிட வாழ்க்கைக்கு மிகவும் அடி ஆதாரமாக
இருக்கின்றது. இதற்கு கை கொடுக்கும் அதிகாரிகளாகத்தான் நாங்கள்
இருக்கின்றோம்.

அதனால்தான் வல்லுவன் சொன்னார் விவசாயி சேற்றில் இறங்கினால்தான் நாடு வளம் பெறும் என்று. அப்பொழுதுதான் இந்த உலகத்தில் இருக்கின்ற 700 கோடி மக்கள் தங்கள் உணவின் மூலம் தங்கள் நாளாந்த வாழ்க்கையை கொண்டு செல்லக் கூடியதாக இருக்கினறது.

எனவே விவசாயத்தை சார்ந்து வாழ்கின்ற மக்களாகிய நாங்கள் இவ் விவசாயத்தை நம்பி எமது வாழ்க்கையை கொண்டிருக்கின்ற நாங்கள் இந்த விவசாயத்தை விழ்ச்சி அடைய விடாமல் அத்துடன் நமது பொருளாதாரமும் வீழ்ச்சி அடைய விடாது விவசாயத்தை இறுக்கமாக பற்றிக்கொள்ள கொள்ள வேண்டும்.

வடக்கு மாகாணமும் இந்த விவசாய திணைக்களத்தினூடாக ஐந்து நிர்வாக
மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை மாகாண சபையின் ஊடாகவும் வேறு அரசு சார்பற்ற நிறுவனங்கள் ஊடாகவும் நாங்கள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

நான் எமது மாகாண அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் விவசாய
பணிப்பாளரிடம் கேட்பதுண்டு. ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு வல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றீர்களே இதனால் மக்கள் பலன் அடைகின்றார்களா?

 இதன் மூலம் இவர்கள் வருமானத்தை பெற்று தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்லகின்றார்களா? இவர்களுக்கு நன்மை பயக்குகின்றதா? இவர்கள் நல்ல பெறுபேறுகளை காட்டினால் நாம் இவர்களுக்கு இன்னும் கூடுதலான முதலீடு செய்ய உதவிகள் புரிய தயாராக இருக்கின்றோம்.

இப்பொழுது இங்கு வந்து பார்க்கின்றபோது இந்த மாவட்ட விவசாய பயிற்சி
நிலையம் இதனுடன் சேர்ந்த காணிகளும் ஒரளவுக்கு பயண்படுத்தப்பட்ட நிலையில் மக்களுக்கு எதோ ஒரு செய்தியை சொல்லக் கூடியதாகவும் இருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

எனவே இங்குள்ள விவசாய மக்களுக்கு புதிய தொழில் நுட்பங்களை விவசாய புதிய கண்டு பிடிப்புக்களையும் எமது பாரம்பரியமான விவசாயத்திலிருந்து நாம் மாற்றம் பெற வேண்டும்.

எமது மன்னார் கட்டுக்கரைக் குளத்தின் கீழ் நெற் செய்கையில்  ஒரு
ஏக்கருக்கு 40, 45 மூடை கூடிய விளைச்சலைக் கொடுத்து வருகின்றது. ஆனால் இந்தியாவில் ஒரு ஏக்கருக்கு 100 மூடைகளும் எட்டி இருப்பதாக
தெரிவிக்கப்படுகின்றது.

அந்தளவுக்கு பயிர் செய்கை நுட்பங்கள் அதிகரித்துள்ளன. ஆகவே நாங்கள்
குறைந்த காணியில் கூடிய விளைச்சளை நோக்கி செல்வோமாகில் நாம் எமது
வருமானத்தை பெருக்கக்கூடியதாக இருக்கும் எமது மாவட்டம் ஏனைய
மாவட்டங்களுக்கு ஒரு முன்மாதிரியான மாவட்டமாக இருக்கும்.
இவ்வளவு காலமும் இந்த மாவட்ட விவசாய விரிவாக்க அலவலகம், விவசாய உதவி பணிப்பாளர் அலுவலகம் மன்னார் தீவிலிருந்து தற்பொழுது விவாயிகள் செறிந்து வாழும் மன்னார் பெரும் நிலப்பரப்பாகிய உயிலங்குளத்துக்கு நகர்த்தியுள்ளோம். இதனால் விவசாயிகள் இன்னும் கூடுதலான நன்மை அடைய வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இந்த அலவலங்களும் விவசாயிகளுக்கு சிறந்த சேவைகளை ஆற்றும் என்ற நம்பிக்கையும் உண்டு என்றார்.






மன்னார் விவசாயிகள் நவீன முறை நெற் செய்கையிலும் ஈடுபட வேண்டும்-வட மாகாண சபை பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன். Reviewed by Author on May 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.