அண்மைய செய்திகள்

recent
-

சிறுபான்மை சமூகமாகிய நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் மன்னார் நகர சபை தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரன் டேவிசன்


 21.05.2019 கடந்த மாதம் நடைபெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலை ஒரு சமூகத்தைச் சார்ந்த ஒரு சிலர் செய்தார்கள் என்பதால் நாம் அவர்களின் ஒட்டு மொத்த சமூகத்தையே சந்தேக கண் கொண்டு பார்க்க முடியாது. சிறுபான்மை சமூகமாகிய நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என மன்னார் நகர சபை தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரன் டேவிசன்  தெரிவித்தார்.
மன்னார் நகர சபையின் 15வது மாதாந்த அமர்வு இதன் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரன் டேவிசன் தலைமையில் நேற்று செவ்வாய் கிழமை (21.05.2019) காலை 11 மணியளவில் நடைபெற்றது.

இதன் ஆரம்ப நிகழ்வில் கடந்த மாதம் 21ந் திகதி உயிர்ப்பு ஞாயிறு அன்று குண்டு தாக்குதலுக்கு உள்ளாகி மரணித்த ஆன்மாக்களுக்கும், முன்னாள் மன்னார் நகர சபை தலைவர் ஞானப்பிரகாசம் அவர்களின் ஆன்மாக்களுக்கான இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மன்னார் நகர சபை தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரன் டேவிசன் தொடர்ந்து இங்கு உரையாற்றுகையில் கடந்த மாதம் 21ந் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் பலர் இறந்தும் இன்னும் பலர் படுகாயமடைந்தும் இருந்துள்ளனர்.

 இவ் தாக்குதல் எதற்காகச் செய்தார்கள் என்பது தெரியாத விடயமாக இருக்கின்றது. இது எமது நாட்டை ஒரு குழப்பத்துக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரு செயலாகவே காணப்படுகின்றது. இது ஒரு குழுவால் நடாத்தப்பட்ட செயலாக இருப்பதால் நாம் செய்தவர்களின் ஒட்டு மொத்த சமூகத்தையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க முடியாது. அத்துடன் அந்த சமூகத்தை நாம் நசுக்குவதற்கு ஒருபோதும் நினைக்கவும் கூடாது. இந்த நாட்டிலே நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.

 இந்த செயல்பாட்டில் ஈடுபட்டவர்களை நாம் இனம் கண்டு அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பதை தவிர இவ் தாக்குதல் மேற்கொண்டவர்களின் சமூகத்தை நாம் பிழையாக எண்ணிவிடக் கூடாது. எமது நாட்டிலே பல சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் ஆட்சி செய்வது பெரும்பான்மை சமூகம்தான். ஆகவே சிறுபான்மை சமூகமாகிய நாம் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்றார்.


சிறுபான்மை சமூகமாகிய நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் மன்னார் நகர சபை தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரன் டேவிசன் Reviewed by Author on May 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.