அண்மைய செய்திகள்

recent
-

மூச்சுத்திணறல் பிரச்சனையா? இதோ சில வீட்டு வைத்தியங்கள் -


இருதயம் சரியாய் இயங்க முடியாத நிலையில் மூச்சுத் திணறல் ஏற்படும்.
அதுமட்டுமின்றி ஏதாவது ஒரு பொருள் தொண்டையில் சிக்கி நுரையீரல் காற்றுக்குழாயை அடைக்கும்போது மூச்சுத்திணறுதல் ஏற்படுகிறது.
மூச்சுத்திணறல் பிரச்சனைக்கு ஒருசில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

  • ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தினமும் குடித்து வந்தால், மூச்சுத்திணறல் பிரச்சனை குறைவதைக் காணலாம். முக்கியமாக இந்த செயலால் ஆஸ்துமா கட்டுப்பாட்டில் இருக்கும்.
  • சில துளிகள் கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி ஒரு ஜாரில் போட்டு, அதில் கற்பூரத்தை சேர்த்து, அந்த மணத்தை சுவாசிக்க வேண்டும்.
  • 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், மூச்சுத்திணறல் ஏற்படுவதைத் தடுக்கலாம். முக்கியமாக எலுமிச்சை ஜூஸை சர்க்கரை சேர்க்காமல் குடிப்பதால் தான் நன்மையைப் பெற முடியும்.
  • தேன் மூச்சுத்திணறலுக்கு காரணமான அழற்சியையும் தடுப்பதில் வல்லது. தேன் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். வேண்டுமானால், தேனை ஒரு ஜாரில் விட்டு, அதன் மணத்தை சுவாசிக்கலாம்.
  • மூச்சுத்திணறல் பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள், 3-4 பற்கள் பூண்டு சாப்பிடுவதன் மூலம், ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கலாம்.
  • மூச்சுத்திணறல் பிரச்சனை இருந்தால், 1 டீஸ்பூன் ஆளி விதை எண்ணெயை தினமும் உட்கொள்ளலாம். இல்லாவிட்டால், 1/2 டீஸ்பூன் ஆளி விதையை வாயில் போட்டு தினமும் மென்று சாப்பிடலாம்.
  • ஜின்கோ பிலோபா என்னும் மூலிகையை கொதிக்கும் நீரில் போட்டு டீ போன்று தயாரித்துக் குடிக்கலாம். இல்லாவிட்டால், இந்த மூலிகை மாத்திரை வடிவில் நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது. அதைக் கூட வாங்கி சாப்பிடலாம்.
மூச்சுத்திணறல் பிரச்சனையா? இதோ சில வீட்டு வைத்தியங்கள் - Reviewed by Author on June 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.