அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மனித புதைகுழியின் தற்போதைய நிலை....படங்கள்


மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் சதோசா வளாகம் அமைப்பதற்கு என அகழப்பட்ட மண்ணில் இருந்து சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து குறித்த சதோசா வளகத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக அகழ்வு பணிகள் இடம் பெற்றது.

குறித்த அகழ்வு பணிகளின் போது சுமார் 342 மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் குறித்த மனித எச்சங்கள் எந்த காலப்பகுதிக்கு உரியவை என கண்டறிவதற்காக அமெரிக்காவில் உள்ள புளோரிட ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஆய்வு முடிவுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

அந்த நிலையில் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் கடந்த 03.08.2019 இடம் பெற்ற உயர் மட்ட கலந்துரையாடலில் குறித்த புதைகுழி அகழ்வு பணிகளை தற்காலிகமாக இடை நிறுத்துவதுடன் குறித்த மனித புதைகுழி பகுதியில் காணப்படும் மண் படைகள் மற்றும் ஏனைய சாத பாதக தன்மைகள் தடைய பொருட்கள் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை ஒன்றினை வழங்குமாறு களனி பல்கலைகழக பேராசிரியர் ராஜ் சோமதேவ்விடம் கோரப்பட்டிருந்தது.

குறித்த அகழ்வுகள் நிறுத்தப்பட்டு மூன்று மாத காலப்பகுதி ஆகின்ற நிலையில் மன்னார் மனித புதைகுழி மற்றும் மனித புதைகுழி வளாகம் பாராமரிப்பற்று மீள் ஆய்வு பணிக்கு பயன்படாத நிலையில் காணப்படுகின்றது.

வளாகம் முழுவதுன் நீர் நிறைந்து காணப்படுவதுடன் சண்ணல் தாவரங்கள் மற்றும் பொலித்தீன் குப்பைகளால் குறித்த வளாகம் நிறைந்து காணப்படுகின்றது

அதே நேரத்தில் குறித்த மனிதபுதைகுழி தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பான கலந்துரையாடல்இன்றய தினம் காலை 8 மணியளவில் மன்னார் நீதவான் நீதிமன்றவளாகத்தில் இடம் பெறவுள்ளது அத்துடன் இன்றய தினம்  மன்னார் மனித புதைகுழி தொடர்பான வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த கூட்டத்தில் அழைக்கப்பட்ட திணைக்களங்கள் உட்பட் காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக வாதிடும் சட்டத்தரணிகளும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடதக்கது.




மன்னார் மனித புதைகுழியின் தற்போதைய நிலை....படங்கள் Reviewed by Author on June 27, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.