அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் இனவழிப்பை ஐ.நா விசாரணை செய்யக்கோரி கனடிய பாராளுமன்றத்தில் தீர்மானம்!


பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கனேடிய பாராளுமன்றத்தில் தமிழின அழிப்பிற்கான ஐ.நா விசாரணை செய்யக்கோரிய தீர்மானம் மூன்று முறை தோற்கடிக்கப்பட்டு 4வது முறையாக இத்தீர்மானம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,

1) வன்முறையாலும் போராலும் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் இரங்கலைத் தெரிவிக்கிறது,
2) உயிர்த்தஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குமாறும், மதச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்குமாறும் இலங்கை அரசிடம் கோருகிறது,

3) ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 30/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களின் கீழ் பணிக்கப்பட்டவாறு, தெளிவான கால அட்டவணைக்கு அமைவாக அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுமாறு இலங்கையிடம் கனேடிய அரசு விடுத்த கோரிக்கையை மீள
உறுதிசெய்வதுடன், பொறுப்புக் கூறலை மேற்கொள்வது, சமாதானத்தை ஏற்படுத்துவது, நாட்டில் உள்ள அனைவருக்கும் இடையில் மீளிணக்கத்தை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்குக் கனடாவின் ஆதரவை மீள உறுதிசெய்கிறது,
4) இலங்கையில் தமிழர்கள் மீது புரியப்பட்டதாகக் கூறப்படும் இனப்படுகொலை மற்றும் 2009 ஆம் ஆண்டில் போரின் இறுதிக் காலம். குறித்த விசாரணை செய்வதற்கு சுதந்திரமான, சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் கனடிய அரசு கோரிக்கை விடுக்கிறது.

இந்த தீர்மானம் NDP கட்சியின் மனித உரிமைக்கு பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் Cheryl Hardcastle பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.
NDP கட்சிக்கும் மற்றும் அதன் தலைவர் Jagmeet Singh அவர்களுக்கும் கனடிய தமிழர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் என கனடிய தமிழர் தேசிய அவை நன்றிகளை தெரிவித்துள்ளது.
இது குறித்த வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இம்முயற்சியில் Liberal கட்சியினுடைய முன்முயற்சியை, MP Shaun Chen ன் ஊடாக பாராளுமன்றதில் மே 25ல் தீர்மானமாக கொண்டு வந்ததற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Minister Nadeep Bains மற்றும் MP Gary Anadasangaree ஆகியோர் தொடர்ச்சியாக NCCT யுடன் தீர்மான வரைபில் ஈடுபட்டு, NDP கட்சி பாராளுமன்றத்தில் தீர்மானம் முன்வைத்ததை ஆதரித்திருந்தனர்.

கனடிய பிரதமர் Justin Trudeau மற்றும் கனடிய வெளிநாட்டமைச்சு இந்த விடயத்தில் முக்கிய தலைமத்துவத்தை கொடுத்ததை வரவேற்று கனடிய தமிழர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Conservative கட்சி சார்பில் MP Garnett Genuis அவர்கள் இவ்வரைபை மே 25 பாராளுமன்றத்தில் முன்வைத்ததற்கும், தீர்மானத்தின் திருத்தத்தை ஏற்றுக் கொண்டதற்கும், மீண்டும் அத் தீர்மானத்தை வெளிநாட்டு அமைச்சின் குழுவிற்கு ஜூன் 18ல் சமர்ப்பித்ததற்கும், எதிர்க்கட்சி தலைவர் Andrew Scheer அவர்கள் இவ்விடயத்தில் ஒருமித்த ஆதரவை வழங்கியதற்கும் கனடிய தமிழர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்துடன் ஒன்ராரியோ பாராளுமன்ற உறுப்பினரான விஜய் தணிகாசலம் அவர்கள் மத்திய Conservative கட்சியுடனான பேச்சுவார்த்தை பரிமாற்றத்திற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

கனடியத் தமிழர் தேசிய அவை தொடர்ச்சியாக இத் தீர்மானத்தின் வரைபை முன்வைப்பதற்கு அயராது உழைத்து, அனைத்து கட்சியையும் இத்தீர்மானத்தை ஆதரிக்க வைத்திருந்தனர்.
இத் தீர்மான வரைபில், கனடியத் தமிழர் தேசிய அவை தொடர்ச்சியாக, மற்றைய பிரதேச அமைப்புக்கள், தன்னார்வலர்கள், கனடிய தமிழர் தேசிய அவையின் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களின் கடுமையான உழைப்பினூடகவே நிறைவேற்றி இருந்தனர்.

தமிழர்களின் நீதிக்கான ஒரு சரியான முன்னகர்வாக அமைகின்றது.” என கனடிய தமிழர் தேசிய அவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இனவழிப்பை ஐ.நா விசாரணை செய்யக்கோரி கனடிய பாராளுமன்றத்தில் தீர்மானம்! Reviewed by Author on June 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.