அண்மைய செய்திகள்

recent
-

சிவில் உடையில் செயல் பட்ட முருங்கன் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸாரின் செயற்பாடு குறித்து மக்கள் விசனம்



வீதி ஓரமாக நின்று பீடி புகைத்துக் கொண்டிருந்த இருவரை சிவில் உடையில் வந்த பொலிஸார் கஞ்சாவை பலவந்தமாக கொடு அவர்களை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவம் ஞாயிற்றுக்கிழமை 07-07-2019 காலை மன்னார் நறுவிலிக்குளம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,

திருகோணமலையைச் சேர்ந்த குடும்பம் மடுத்திருப்பதிக்காக வருகை தந்து அதன் பின்னர் அவர்கள் மன்னார்  நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள   தனது நண்பியின் வீட்டிற்குச் சென்றனர்.

அதன் பின்னர் அவர்களில் இருவர் ஞாயிற்றுக்கிழமை (7) காலை அந்த வீதி ஓரத்தில் இருக்கும் கடைக்கு சென்று நண்பி வீடு திரும்புகையில் வீதியோரமாக நின்று பீடி புகைப்பதற்காக நின்று பீடி புகைத்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த வழியாக சிவில் ஆடையில் வந்த இரு பொலிஸார் தாங்கள் கொண்டு வந்த கஞ்சாவை பீடி புகைத்துக் கொண்டிருந்த இருவர்களில்  ஒருவரின் கையில் கொடுத்து கஞ்சாவை வாங்கி கொள்ளுமாறு பலவந்தப்படுத்தியுள்ளனர்.
ஆனால் குறித்த இருவரும் கஞ்சாவை பெற்றுக்கொள்ள மறுத்தனர்.

மறுத்தமையால் அருகில் நின்ற வாகன ஓட்டுனரையும் அடிக்க சென்றுள்ளனர். அதன் பின்னர் முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு குறித்த நபரை அழைத்துச் சென்றுள்ளனர்.இந்த நிலையில் கைது செய்யப்பட்டவரின் சகோதரிகளும் மருமகள்மாரும் அந்த இடத்திலே நின்று அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
எனினும் அவர்கள் அவரை விடுவிப்பதாக இல்லை.

 பொலிஸ் அதிகாரி ஒருவர்  வந்து எங்களிடம் கஞ்சா 600 கிராமில் இருப்பதாகவும் அதை விட தாங்கள் கஞ்சாவின் அளவை குறைத்து விடுவிப்பதாகவும் கூறினார்.

 அதன் பின்னர் அந்த கஞ்சா பக்கட்டை ஆராய்ந்து பார்க்கையில் அந்த கஞ்சா பக்கட்டில் பிடித்த நபரது கை அடையாளம் இல்லை என்பதுடன் குறித்த கஞ்சா பக்கற்றுக்கும் குறித்த நபருக்கும் சம்மந்தம் இல்லை என்பது தெரிந்த நிலையில் குறித்த நபரை விடுவித்தனர்.

-குறித்த சிவில் உடையில் சென்ற பொலிஸாரின் செயற்பாடு குறித்து மக்கள் தமது விசனத்தை தெரிவித்துள்ளதோடு,ஒரு சிலர் பொலிஸாரின் இவ்வாறான செயற்பாடு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகின்ற அனைத்து பொலிஸாருக்கும் அவதூறு ஏற்படுத்துவதாகவும்,இவ்வாறு மக்களை அச்சுறுத்தி செயல்படுகின்ற பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


சிவில் உடையில் செயல் பட்ட முருங்கன் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸாரின் செயற்பாடு குறித்து மக்கள் விசனம் Reviewed by Author on July 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.