அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சன்னார் வன இலாகா பகுதிக்குள் மரம் அரிந்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் கைது.

மன்னார் சன்னார் பகுதியில் வன இலாகாவுக்கு சொந்தமான கானகத்துக்குள் மரம் அரிந்து கொண்டிருந்த நபர் ஒருவர் கையும் மெய்யுமாக அகப்பட்டுக் கொண்டார். இவர் மன்னார் நீமவான் நீதிமன்றில் ஆஐர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவ் சம்பவமானது கடந்த திங்கள் கிழமை (07.10.2019) மன்னார் சன்னார்
பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சன்னார் நடு ஓடுக்க காட்டுப் பகுதிக்குள்
வன இலாகாவுக்கு உரிமையான பகுதிக்குள் சட்டபூர்வமற்ற முறையில் மரங்களை அரிந்து கொண்டிருந்தபொழுது கையும் மெய்யுமாக அகப்பட்டுக் கொண்டார்.
.
95 ஆயிரத்து 965 ரூபா 14 சதம் பெறுமதியான 45 மரப் பலகைகளுடன் கைது
செய்யப்பட்டதாக தெரிவித்து இவ் நபரை சன்னார் வன இலாகா உத்தியோகத்தர் எஸ்.பி.எம்.ஜெபர்சன் நேற்று முன் தினம் வியாழக் கிழமை (10.10.2019) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் ஆஐர்படுத்தப்பட்டார்.

 இவ் சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஆட்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் கிராம அலுவலகரின் கடிதமும் சமர்பிக்க வேண்டும் என நீதிபதி கட்டளை பிறப்பித்தார்.

மன்னார் சன்னார் வன இலாகா பகுதிக்குள் மரம் அரிந்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் கைது. Reviewed by Author on October 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.