அண்மைய செய்திகள்

recent
-

மாணவச் செல்வங்களே பெற்றோர் ஆசிரியர்களை ஏமாற்றி வாழ நினைக்காதீர்கள்.அருட்பணி ரவ்வாயல் அடிகளார்

மாணவ செல்வங்களே நீங்கள் உங்கள் பெற்றோரை உங்கள் ஆசிரியர்களை ஏமாற்றி வாழ நினைக்காதீர்கள். உங்கள் பாடசாலையில் நீ ஒரு நண்பரை
தேர்ந்தெடுத்திருந்தாலும் அதை உடன் பெற்றோருக்கு தெரியப்படுத்திருக்க
வேண்டும்.. நல்ல சிந்தனைகள் நல்ல வார்த்தைகள் நல்ல செயல்பாடுகள் எம்
மத்தியில் நிலைகொள்ள வேண்டும் என தென் இந்திய நாட்டைச் சேர்ந்த அருட்பணி ரவ்வாயல் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பேசாலையில் இரண்டு பிரபல
பாடசாலைகளும் மூன்று சிறுவர் பாடசாலைகளும் இணைந்து இவ் தினத்தை  செவ்வாய் கிழமை  01.10.2019 கொண்டாடியபோது திருப்பலிக்கு தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்த வேளையில் தனது மறையுரையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அருட்பணி ரவ்வாயல் அடிகளார் இங்கு தொடர்நது தெரிவிக்கையில்

கிறிஸ்தவ பைபிலில் நாம் பார்க்கின்றோம் விண்ணகம் யாருக்குரியது என்றால் குழந்தைகள் போல் இருப்பவர்களுக்கே மோட்ச இராச்சியம் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் மனநிலை மூன்று விதமாக இருக்கின்றது. மன்னிக்கும் மனப்பாங்கு உள்ளவர்கள், அன்பு செய்பவர்கள், மற்றையது மற்றவர்களுக்கு பகிரும் தன்மை கொண்டவர்கள்.

நாம் பார்க்கின்றோம் பிள்ளையை ஒரு தாய் அடித்துவிட்டாள் அழுதாலும் அந்த தாயின் மடியிலே போய் படுத்து விடுவார்கள். குழந்தைகளின் அன்பை நோக்கும்போது அவர்கள் மனதில் வஞ்சகம் சூது இருக்காது. பழிவாங்கும் தன்மை இருக்காது. அவர்களுக்கு நன்மை தீன்மை என்பது தெரியாது இருக்கும்.

 குழந்தையின் கையில் எதாவது ஒரு உணவுப் பொருள் இருந்து விட்டால் யாராவது கேட்டு விட்டாள் கொடுக்கும் மனப்பாங்கு கொண்டவர்களாக இருப்பார்கள். பிறகு இவர்கள் வளர்ந்து வருகின்ற காலங்களில் வேறொரு வழிகளிலும் பாதைகளிலும் குடும்ப சூழலிலும் சமூதாயத்தில் அவர்கள் பார்க்கின்ற விதத்தில்தான் இவர்கள் நல்லவனாகவும் கெட்டவனாகவும் இவர்களை மாற்றி அமைக்கின்றது.

ஆகவேதான் கிறிஸ்து கூறுகின்றார் நீங்கள் இந்த சிறுவர்கள்போல்
மாறாவிட்டால் விண்ணகரசுக்கு செல்ல முடியாது என தெரிவித்திருந்தார்.

நம் மத்தியில் பகிரும் தன்மை, மன்னிக்கும் தன்மை, மற்றையவர்களை அன்பு
செய்யும் நற்குணம் கொண்டவர்களாக நாம் வாழ வேண்டும். எமது குடும்பங்களிலும் சமூதாயத்திலும் பகிர்ந்து வாழாதவர்கள் எத்தனையோ பேர்களை நாம் பார்க்கின்றோம்.

அவ்வாறு பிறரரை ஏமாற்றி வாழும் சமூகத்தையும் நாம் தற்பொழுது கண்டு
வருகின்றோம். ஏமாற்றி வாழும் குணத்தை நாம் கைவிட வேண்டும். இந்த நல்ல குணத்தை நாம் எமது குடும்பங்களிலிருந்து அனுபவ ரீதியாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக மாணவ செல்வங்களே நீங்கள் உங்கள் பெற்றோரை உங்கள் ஆசிரியர்களை ஏமாற்றி வாழ நினைக்காதீர்கள். உங்கள் பாடசாலையில் நீ ஒரு நண்பரை தேர்ந்தெடுத்திருந்தாலும் அதை உடன் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

நான் படிக்கின்றேன் பாடசாலை செல்லுகின்றேன் வீட்டுப் பாடங்கள் எல்லாம்
செய்கின்றேன் தெரிவித்து நீ உன் ஆசிரியரை பெற்றோரை ஏமாற்றினாய் என்றால் நீ பசாசின் வலைக்குள் வீழ்ந்து விட்டாய் என நினைத்துக் கொள். சமூதாயம் நம்மை ஏமாற்ற நினைக்கும். நீ அந்த வலைக்குள் வீழ்ந்துவிடக்
கூடாது. நீ சமூதாயத்துக்கு முன் மாதிரிகையாக இருக்க வேண்டும்.

சிலர் நம்மோடு இருந்துக் கொண்டு குழி பறிப்பார்கள் நாம் ஒவ்வொருவரும்
இவ்விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இது உறவுகளுக்குள்ளும் இருக்கும் வெளியிலும் இருக்கும்

ஆகவே நாம் இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்டவர்கள் அவரைப்போல் நாமும் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் ஆகவே எமக்கு நல்ல சிந்தனைகள் நல்ல வார்த்தைகள் நல்ல செயல்பாடுகள் எம் மத்தியில் நிலைகொள்ள வேண்டும் இவைகள் குடும்பத்தில் ஆரம்பித்து பாடசாலையில் கற்பிக்கப்படுகின்றபோது இவை சமூதாயத்தில் வெளிப்படும் என்றார்.


மாணவச் செல்வங்களே பெற்றோர் ஆசிரியர்களை ஏமாற்றி வாழ நினைக்காதீர்கள்.அருட்பணி ரவ்வாயல் அடிகளார் Reviewed by Author on October 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.