அண்மைய செய்திகள்

recent
-

உயிலங்குளம் விவசாய கேட்போர் கூட மண்டபத்திற்கு முன் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கால் நடை வளர்ப்பாளர்கள் போராட்டம்.

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கால் நடை வளர்ப்பாளர்கள் உயிலங்குளம் விவசாய கேட்போர் கூட மண்டபத்திற்கு முன் இன்று வியாழக்கிழமை காலை 11.30 மணியவில் அமைதியான முறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

உயிலங்குளம் விவசாய கேட்போர் கூட மண்டபத்தில் கால போக சிறு போகம் தொடர்பான கூட்டம் இன்று வியாழக்கிழமை (24) காலை இடம் பெற்ற போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கால் நடை வளர்ப்பாளர்கள் ஒன்று கூடி குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கால் நடை வளர்ப்பாளர்கள் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கட்டையடம்பன் பகுதியில் மேய்ச்சல் நிலம் இனங்காணப்பட்ட போதும் உரிய அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயற்படுகின்றனர்.

ஆனால் தற்போது மேய்ச்சல் நிலமாக இனங்காணப்பட்ட குறித்த பகுதியில் பெரும்போக நெற்செய்கைக்கான அபிவிருத்தி வேலைகள் நடை பெற்று வருகிறது.

எனவே குறித்த பகுதியில்  தற்போது விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதினால் குறித்த நடவடிக்கையினை நிறுத்தி நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கால் நடை வளர்ப்பாளர்களின் கால் நடைகளுக்கான மேய்ச்சல் நிலமாக மாற்றி தருமாறு கோரிக்கை விடுத்ததோடு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன் போது அங்கு சென்று போராட்டத்தில் கலந்து கொண்ட நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கால் நடை வளர்ப்பாளர்களிடம் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நானாட்டான் பிரதேசச் செயலகத்தில் இடம் பெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

-இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கால் நடை வளர்ப்பாளர் அங்கிருந்து சென்றனர்.

உயிலங்குளம் விவசாய கேட்போர் கூட மண்டபத்திற்கு முன் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கால் நடை வளர்ப்பாளர்கள் போராட்டம். Reviewed by Author on October 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.