அண்மைய செய்திகள்

recent
-

சுவிற்சர்லாந்து செங்காலன் கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் சிறப்புடன் நடைபெற்ற கந்தசஷ்டி உற்சவம் -


ஐரோப்பாவில் பிரசித்திபெற்ற சுவிற்சர்லாந்து செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி உற்சவம் மிகவும் சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் இடம்பெற்றுள்ளது.
கடந்த 28.10.2019 திகதி ஆரம்பமாகிய கந்தசஷ்டி உற்சவம் தினமும் பிற்பகலில் விசேட ஸ்நபன அபிஷேகம், விசேடபூசை, வசந்தமண்டபபூசை, உள்வீதி வலம் என பல்வேறு நிகழ்வாக வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இறுதி நாளான 2ஆம் திகதி சனிக்கிழமை சூரசம்ஹாரம் சிறப்பாக இடம்பெற்றது.
ஆலய வெளிவீதியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தத்ரூபமாக சூரசம்ஹாரம் நடைபெற்றது.

சூரசம்ஹாரம் முடிவடைந்து ஆலயம் திரும்பிய கதிர்வேலாயுதருக்கு விசேட அபிஷேகம் இடம்பெற்றன.
அதனைத்தொடர்ந்து கந்தசஷ்டி விரதம் அனுஸ்டித்த நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு காப்பு கட்டி அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
மறுநாள் காலையில் பாறணை பூசையும் மாலை திருக்கலியாணமும் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
கதிர்வேலர் வள்ளி,தெய்வானை திருக்கலியாணம் ஆகம விதிமுறைகளின்படி தத்ரூபமாக இடம்பெற்றது.

சிவத்தமிழ்க் காவலர், சிவநெறிச் செல்வர், சைவ சித்தாந்த சிரோன்மணி, சைவசித்தாந்த ஜோதி, தமிழ்ச்சுடர் ஆறுமுகம் செந்தில்நாதன் கந்தசஷ்டி விரதம் மற்றும் திருக்கலியாணம் தொடர்பாக விரிவான விளக்கங்களுடன் சிறப்புரை ஆற்றினார்.
உற்சவங்களை ஆலயபிரதமகுருவான சிவாகமரத்தின சிவஸ்ரீ முத்துமீனாட்சிசுந்தரம் முத்துசாமி சிவாச்சாரியார் (அருள்மிகு மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோவில்) அவர்களும் சிவாகம விசாரத சித்தாந்தவித்தகர் கலைமாமணி டாக்டர் பிரம்ம ஸ்ரீ சாம்ப சோமஸ்கந்த குருஜி (கனடா) அவர்களும் இணைந்து வெகு சிறப்பாக நடத்திவைத்தனர்.
ஆலய ஆஸ்தான வித்துவான் மார்க்கண்டு செந்தூரனுடன் அவரது குழுவினரும் மங்களவாத்தியம் இசைக்க வெகு சிறப்பாக கந்தசஷ்டி உற்சவம் நிறைவடைந்தது.
சுவிற்சர்லாந்து செங்காலன் கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் சிறப்புடன் நடைபெற்ற கந்தசஷ்டி உற்சவம் - Reviewed by Author on November 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.