அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் உயிலங்குளம் பிரதான வீதியில் விபத்து-ஒருவர் காயம்-படம்

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,உயிலங்குளம் பகுதியில் மாடு கட்டப்பட்ட கயிற்றில் சிக்கி நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை இரவு ஒருவர் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,உயிலங்குளம் பகுதியில் உள்ள வீதி ஓரத்தில் மாடு கட்டப்பட்ட நிலையில் குறித்த மாடு கயிற்றுடன் வீதிக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) இரவு 7. மணியளவில் குறித்த வீதியால் மோட்டார் சைக்கிலில் பயணித்த நபர் ஒருவர் குறித்த மாட்டுடன் கட்டப்பட்ட கயிற்றில் சிக்கி விபத்திற்கு உள்ளாகினார்.

குறித்த வீதியால் பயணித்தவர்கள் குறித்த நபரை மீட்டு மன்னார் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
குறித்த வீதி ஓரங்களில் அண்மைக்காலமாக மாடுகள் கட்டப்படுவதினால் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம் பெற்று வருகின்றதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.மன்னார் உயிலங்குளம் பிரதான வீதியில் விபத்து-ஒருவர் காயம்-படம் Reviewed by Author on December 30, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.