அண்மைய செய்திகள்

recent
-

அதிகரித்துவரும் டெங்கு நோய் தாக்கம் விசேட ஏற்பாடுகள் ஊடாக நோய் தாக்கத்தை தடுக்க நடவடிக்கை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு

மன்னார் மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு என விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வாரம் தோறும் டெங்கு நோய் தாக்கம் தொடர்பாக ஆராயும் மீளாய்வு கூட்டம் இடம் பெறுவதாகவும் பராமறிப்பற்ற பொது காணிகளில் உள்ள டெங்கு பரவகூடிய இடங்கள் அழித்தொழிக்கப்பட்டுள்ளதாவும் பராமறிப்பற்ற டெங்கு தாக்கம் ஏற்பட கூடிய கற்கை நிலையங்களை உடனடியாக மூடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மோகன்றாஸ் தெரிவித்துள்ளார்

அதே நேரத்தில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரு மாதங்களிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலை காணப்படுவதாகவும் இவ் ஆண்டில் மொத்தமாக 141 நோயாளர்கள் டெங்கு நோய் தாக்கம் உடையவர்களாக இனம் காணப்பட்டுள்ளதாகவும்
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலும் மன்னார் பகுதியில் அதிக அளவு டெங்கு நோயாளர்கள் இனங்கானப்பட்டுள்ளதாகவும் இதற்கான கட்டுப்பாட்டு முறைகள் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் வழிகாட்டுதல்களின் கீழ் ஐந்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் சுகாதார ஊழியர்கள் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் க.செந்தூர்பதி ராஜா தெரிவித்துள்ளார்

அதே நேரத்தில் தொடர்சியாக மழை பெய்துவருவதனால் டெங்கு பரவுவதற்கான வாய்புகள் அதிகரிக்க வாய்புகள் காணப்படுவதனால் பொது மக்கள் தமது பொறுப்புக்களை உணர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் கடந்த ஐந்தாம் திகதி டெங்கு நோய்தாக்கத்தின் காரணமாக ஒன்பது வயது சிறுமி உயிரிழந்தமை குறிப்பிடதக்கது.

அதிகரித்துவரும் டெங்கு நோய் தாக்கம் விசேட ஏற்பாடுகள் ஊடாக நோய் தாக்கத்தை தடுக்க நடவடிக்கை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு Reviewed by Author on December 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.