அண்மைய செய்திகள்

recent
-

தோட்டவெளிப் பங்குத்தந்தை காவல்துறை அதிகாரியால்- மன்னார் மடு மாதா சிறிய குருமட பழைய மாணவர் அமைப்பு கண்டனம்

தோட்டவெளிப் பங்குத்தந்தை காவல்துறை அதிகாரியால் தாக்கப்பட்டமையை வண்மையாக கண்டிப்பதாக மன்னார் மடு மாதா சிறிய குருமட பழைய மாணவர்  அமைப்பு தெரிவித்துள்ளது.
-இவ்விடையம் தொடர்பாக மன்னார்  மடுமாதா சிறிய குருமட பழைய மாணவர் அமைப்பின்  உப செயலாளர் பொனிப்பாஸ் ஆன்சலோ பீரிஸ் கண்டன அறிக்கை ஒன்றை இன்று(21) விடுத்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
;.                                      
மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள வேதசாட்சிகளின் புனித பூமியாம் தோட்ட வெளியில் கடந்த 18.12.2019 அன்று முறையற்ற விதத்தில் மண் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளபப்பட்டது.

 இதனைத் தடுத்து நிறுத்த முயற்சித்த மக்களைக் காவல்துறை அதிகாரிகள் தாக்க முற்பட்டனர். இதனைக் கேள்விப்பட்ட தோட்டவெளி பங்குத்தந்தை அருட்பணி. அலக்சாண்டர் சில்வா (பெனோ) அவர்கள் நிலமையைச் சுமுகமாக்க அவ்விடத்திற்குச் சென்றுள்ளார்.

ஆனால் குறிப்பிட்ட காவல்துறை அதிகாரி அங்கு சென்ற பங்குத்தந்தை அவர்களைப் பிடித்துத் தள்ளிவிட்;டதோடு தீய வார்த்தைகளாலும் பேசியுள்ளார்.
 அக் குருவானவரை அவமானப்படுத்தியதோடு கத்தோலிக்கர்களை ஒழிக்க வேண்டும் என்ற தொனியிலும் கதைத்துள்ளார்.

குறிப்பிட்ட காவல்துறை அதிகாரி ஒரு முஸ்லிம் இனத்தவராக இருக்கின்ற நிலையில் அவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகக் காட்டியுள்ளார்.
சமயக் குருக்கள் மக்களின் மதிப்பிற்கும் வணக்கத்துக்கும் உரியவர்கள். இவர்கள்மீது கை வைத்துத் தள்ளுவது, தூசண வார்த்தைகiளால் பேசி அவமானப்படுத்துவது போன்ற செயற்பாடுகளை எந்தச் சமூகமும் ஏற்றுக்கொள்ளாது. இந்தக் காவல்துறை அதிகாரி வேண்டுமென்றே திட்டமிட்டு மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளார்.

மன்னாரில் உள்ள சகல மதத்தவர்களும் ஒற்றுமையாக வாழவே விரும்புகின்றனர். மதங்கள் ஒற்றுமையாக இருப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் உதவவேண்டுமே தவிர இடையூறாக இருக்கக்கூடாது.

மணல் அகழ்வானது சட்டவிரோதமானதா இல்லையா என்பதை ஆய்வு செய்து மேலதிக முறைப்படியான நடவடிக்கைக்கு இவர் வழிகாட்டியிருக்க வேண்டும்.

மன்னார் பிரதேச சபையும் மணல் அகழ்வதற்குத் தடை விதித்திருப்பதால் உரிய காவல்துறை அதிகாரி ஒழுக்கமாக நடந்து தனது மேலதிகாரிகள் மூலமாகத் தீர்வைக் கண்டிருக்க வேண்டும். இந்தக் காவல்துறை அதிகாரியின் செயற்பாடுகள் பல கேள்விகளுக்கு இடமளிக்கின்றது.

 அவர் ஏன் மணல் அகழ்விற்கு வந்திருந்தவருக்குச் சார்பாகச் செயற்பாட்டார்? ஏன் மக்களோடு கடுமையாக நடந்துகொண்டார்? ஏன் ஒரு பங்குத்தந்தையை இவ்வாறு அவமானப்படுத்தினார்? போன்ற கேள்விகள் முக்கியமானவை. 

இனவாத, மதவாத அடிப்படையில் இவர் செயற்பட்டுள்ளார் என்பது தெளிவாகின்றது.

எனவே இம்மிலேச்சத்தனமான இச்செயற்பாட்டை எமது அமைப்பானது வன்மையாகக் கண்டிக்கின்றது. உயர் அதிகாரிகள் இவர்மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும் கோரி நிற்கிறது. எதிர் காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாமல் இருப்பதை சம்மந்தப்பட்டவர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் எமது அமைப்பு வேண்டி நிற்கின்றது என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தோட்டவெளிப் பங்குத்தந்தை காவல்துறை அதிகாரியால்- மன்னார் மடு மாதா சிறிய குருமட பழைய மாணவர் அமைப்பு கண்டனம் Reviewed by Author on December 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.