அண்மைய செய்திகள்

recent
-

உரோமாபுரி திருச்சபையின் புனித நிலை பேரவின் உறுப்பினர் அருட்பணி நோலன்ட் ஜீக் (அ.ம.தி) வேதசாட்சிகளின் இடத்துக்கு விஐயம்.

மன்னாரில் 475 ஆண்டுகளுக்கு முன் மன்னார் தோட்டவெளியில் 600 க்கு
மேற்பட்டோர் மறைசாட்சிகளாக கொல்லப்பட்டனர்.

இந்த மறைசாட்சிகளை புனிதர்களாக ஆக்குவதற்கான நடவடிக்கைகளையும் மன்னார் மறைமாவட்டத்தில் ஒவ்வொரு பங்கிலும் நாளாந்தம் கத்தோலிக்க மக்கள் திருப்பலி வேளையில் செபிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்க்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமைத்துவம் கொண்ட இறைமக்கள் விடுத்திருக்கும் வேண்டுகோளுக்கு இணங்க ரோமைத் திருப்பீடம் இவ் வேதசாட்சிகளை புனிதர்கள் பட்டத்துக்கான வேலையை செய்து வருகின்றது.

இதற்கமைய உரோமாபுரி திருச்சபையின் புனித நிலை பேரவின் உறுப்பினர் அமல மரி தியாகி சபையைச் சார்ந்த அருட்பணி நோலன்ட் ஜீக் அடிகளார்  செவ்வாய் கிழமை (14.01.2020)  மன்னார் தோட்டவெளிக்கு வருகை தந்து மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் நடைபெற்ற கூட்டுத் திருப்பலியில் கலந்து கொண்டார்.

இவ் கூட்டுத் திருப்பலியில் செபமாலைத்தாசர் சபை மாகாணத் தலைவர் அருட்பணி பிரான்சீஸ் ஜெயசீலன் அடிகளாருடன் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள 46 பங்குகளிலிருந்தும் அருட்பணியாளர்களும் இறை மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உரோமாபுரி திருச்சபையின் புனித நிலை பேரவின் உறுப்பினர் அமல மரி தியாகி சபையைச் சார்ந்த அருட்பணி நோலன்ட் ஜீக் அடிகளார் மறைசாட்சிகளை புனிதர்கள் நிலைக்கு உயர்த்துவதற்கு வேண்டிய சான்றுதல்கள் தொடர்பாக ஆயருடன் உரையாடியுள்ளதுடன் மன்னார் வேதசாட்சிகள் மரணித்து அடக்கம் செய்யப்பட்டுள்ள இடமாகிய தோட்டவெளி வேதசாட்சிகளின் சூழல்களையும் நேரடியாகப் பார்வையிட்டு சென்றுள்ளார்.







உரோமாபுரி திருச்சபையின் புனித நிலை பேரவின் உறுப்பினர் அருட்பணி நோலன்ட் ஜீக் (அ.ம.தி) வேதசாட்சிகளின் இடத்துக்கு விஐயம். Reviewed by Author on January 16, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.