அண்மைய செய்திகள்

recent
-

அழகை கெடுக்கும் கருவளையத்தை ஐந்தே நாட்களில் போக்கணுமா?


முகத்தின் அழகை கெடுப்பதில் கருளையங்களுக்கும் ஒரு பெரிய பங்குண்டு.
இது வகையான காரணங்களினால் ஏற்படுகிறது. குறிப்பாக அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன.
இந்த கருவளையம் வந்துவிட்டால் முக அழகே பொலிவிழந்து காணப்படும். வயதான தோற்றத்தை ஏற்படுத்தும்.
இதனை எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். தற்போது அவற்றில் சில வற்றை இங்கு பார்ப்போம்.


timesofindia

  • 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ் சேர்த்து ஒன்றாக கலந்து அந்த கலவையை கண்களைச் சுற்றி தடவ வேண்டும். வேண்டுமானால், இத்துடன் 1 டீஸ்பூன் ப்ளாக் டீ சேர்த்து கொள்ளலாம். 20 நிமிடம் நன்கு ஊறியதும், நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் கண்களைச் சுற்றி துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்து வந்தால், 5 நாட்களில் கருவளையங்கள் காணாமல் போகும்.
  • தினமும் இரவு தூங்கும் முன் பாதாம் எண்ணெயைக் கொண்டு கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினந்தோறும் செய்யும் போது, நாளுக்கு நாள் கருவளையங்கள் மெதுவாக மறைய ஆரம்பிப்பதை நீங்களே காண்பீர்கள்.
  • ரோஸ் வாட்டரை பஞ்சுருண்டையில் நனைத்து, கண்களை மூடி கண்களின் மேல் வைத்து, 15 நிமிடம் அப்படியே உட்கார வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருவளையங்கள் மாயமாய் மறையும்.
  • சில டீ பேக்குகளை ஃப்ரிட்ஜில் வைத்து, சிறிது நேரம் கழித்து அவற்றை வெளியே எடுத்து, கண்களின் மேல் 15 நிமிடம் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், கருவளையங்கள் குறையும்.
  • எலுமிச்சையின் சாற்றுடன் சிறிது நீர் சேர்த்து, அதை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து, கண்களை மூடி கண்களின் மேல் வைத்து, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை என ஓரிரு நாட்கள் செய்தால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை மறைவதைக் காணலாம்.
  • ஆப்பிள் சீடர் வினிகரைக் கொண்டு கண்களைச் சுற்றி மசாஜ் செய்தால்,கருவளையங்களை மறையச் செய்யும். சிறப்பான பலன் கிடைக்க, தினமும் இரண்டு முறை செய்யுங்கள்.
  • இரவு தூங்கும் முன் தேனை கண்களைச் சுற்றி தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுங்கள்.
அழகை கெடுக்கும் கருவளையத்தை ஐந்தே நாட்களில் போக்கணுமா? Reviewed by Author on March 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.