அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நடுக்குடா காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டம் ஜனாதிபதியின் விசேட செயலணியின் பணிப்பிற்கு அமைவாக அனுமதி-அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்

மன்னார் நடுக்குடா காற்றாலை மின் உற்பத்தி  வேலைத்திட்டம் மக்களை பாதிக்காத வகையில முன்னெடுத்து நடை முறைப்படுத்த   எங்களுடைய ஒத்துழைப்பை கோரியுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் 15-04-2020 புதன் கிழமை மதியம் இடம் பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே வெர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் மாவட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது. மன்னாரில் வௌ;வேறு விலைகளில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விற்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதற்கு அமைவாக நிவாரண உதவிகளுக்கு வெள்ளைச் சம்பா,வெள்ளை நாடு அரிசி அகிய இரண்டும் 95 ரூபாவிற்கு விற்பனை செய்யவும், சில்லறை விலைக்கு 100 ரூபாவிற்கும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டம் முழுவதும் இந்த விலை தான் பின் பற்றப்படும்.

மேலும் சிவப்பு கீரிச் சம்பா 100 ரூபாவிற்கும்,வெள்ளை கீரிச்சம்பா 115 ரூபாவிற்கும் மொத்தமாக கிடைக்கும். சில்லறை வியாபரத்திற்கு சிவப்பு கீரிச் சம்பா 115 ரூபாவிற்கும், வெள்ளை கீரிச்சம்பா 120 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும்.
மக்களின் நாளாந்த தேவைகளுக்கு குறித்த விலைகளில் விற்பனை செய்யப்படும்.குறித்த கட்டுப்பாட்டு விலைகளை மீறி விற்பனை செய்ய முடியாது என தீர்மானிக்கப்பட்டது.

மேலும் நிவாரணங்களுக்காக முக்கிய பொருட்களை வழங்குமாறு கோரியுள்ளோம்.மேலும் மக்கள் விரும்பினால் மாத்திரம் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றை வழங்க வேண்டும்.
அரிசி, மா,சீனி,சோயா மீற் பக்கட்,தேயிலை,சவர்க்கார வகைகள் போன்றவை அவசியமாக வழங்கப்பட்ட வேண்டும்.நிவாரண செயற்பாடுகளை மன்னார் மாவட்டத்தில் 'சதொசா' மற்றும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்களினூடாக மேற்கொண்டு வருகின்றோம்.

சதொசா விற்கு பொருட்களின் வருகை குறைவாக உள்ளமையினால் பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தினையும் குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட பணித்துள்ளோம்.

-மேலும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் கடந்த காலங்களில் முழுமையாக செயற்படாததன் காரணத்தினால் அவர்களின் கொள்வனவு சக்தி மிகவும் குறைவாக காணப்படுகின்றது.மாந்தை வடக்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும்,ஏனைய சங்கங்களுக்கு 10 இலட்சம் ரூபாவும் நிவாரண பொருட்களை கொள்வனவு செய்ய முற்பணமாக வழங்கி வைத்துள்ளோம்.

மேலும் நிறுவனங்களினால் மக்களுக்கு வழங்கப்படுகின்ற உலர் உணவு பொருட்கள் எவ்வித பாரபட்சமூம் இன்றி சமய ரீதியாகவும்,மொழி ரீதியாகவும் பார்க்காது வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறு சீராக பங்கிட்டு கொடுப்பவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்குவோம்.தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கு அமைவாக அரசியல் ரீதியான முறையில் உலர் உணவு விநியோகங்கள் வழங்கப்பட முடியாது.

நடுக்குடா காற்றாலை மின் உற்பத்தி தொடர்பாக அதன் திட்ட பணிப்பாளர் என்னுடன் கலந்துரையாடினார். குறிப்பாக அவர்கள் கூடுதலான வாக்குறுதி வழங்கி உள்ளனர்.மக்களை பாதிக்காத வகையில் இத்திட்டத்தை முன்னெடுப்பதாக நடை முறைப்படுத்துவதாகவும் அதற்கு எங்களுடைய ஒத்துழைப்பை கோரியுள்ளனர்.

உரிய அனுமதிகளுக்கு அமைவாக குறித்த வேலைத்திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது.ஜனாதிபதியின் விசேட செயலனியின் பணிப்பிற்கு அமைவாக குறித்த திட்டத்தை நடைமுறை படுத்த அனுமதி வழங்கி உள்ளோம்.
எனினும் அவர்கள் மக்களை பாதீக்காத வகையில் கட்டுப்பாடுகளுக்கு அமைவாக குறித்த செயல்பாடு முன்னெடுக்கப்பட உள்ளது. இராணுவம் மற்றும் பொலிஸாரின் பூரண பாதுகாப்பு குறித்த பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் நடுக்குடா காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டம் ஜனாதிபதியின் விசேட செயலணியின் பணிப்பிற்கு அமைவாக அனுமதி-அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் Reviewed by Author on April 15, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.