அண்மைய செய்திகள்

recent
-

சுவிஸ் மலைச்சிகரத்தில் பிரமாண்டமாய் ஒளிர்ந்த இந்திய தேசியக்கொடி!

கொரோனாவுக்கெதிராக உலகமே போராடி வரும் நிலையில், இந்தியாவுடன் தாங்களும் இணைந்து போராடுவதை உலகுக்கு காட்டும் வகையில், சுவிட்சர்லாந்து மலை ஒன்றில் இந்திய தேசியக்கொடி ஒளிரச்செய்யப்பட்டுள்ளது.

அனைத்து இந்தியர்களுக்கும் நம்பிக்கையையும் வலிமையையும் அளிப்பதை உணர்த்துவதற்கு அடையாளமாக, சுவிட்சர்லாந்தின் Matterhorn மலையில் இந்தியாவின் மூவர்ணக்கொடி ஒளிரச்செய்யப்பட்டுள்ளது..
சுவிஸ் ஒளிக்கலைஞரான Gerry Hofstetter, இத்தாலிக்கும் சுவிட்சர்லாந்துக்கும் நடுவில் அமைந்துள்ள 4,478 மீற்றர் பரப்புள்ள மலைச்சிகரத்தில், பல்வேறு நாடுகளின் கொடிகளை ஒளிரச் செய்து அனைத்து நாடுகளுக்கும் நம்பிக்கையூட்டும் செய்தியை தெரிவித்து, கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுவதற்கு சுவிட்சர்லாந்தின் ஆதரவைத் தெரிவித்துவருகிறார்.

உலகின் பிரபலமான நாடுகளில் ஒன்றான இந்தியாவையும் கொரோனா விட்டுவைக்கவில்லை, கொரோனாவுக்கெதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் நாங்களும் நிற்கிறோம் என்பதைக் காட்டுவதற்காகவும், இந்தியர்களுக்கு நம்பிக்கையளிப்பதற்காகவும், இந்திய தேசியக்கொடி Matterhorn மலைச்சிகரத்தில் ஒளிரச்செயப்பட்டுள்ளது என சுவிஸ் சுற்றுலா அமைப்பு தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.



சுவிட்சர்லாந்திலுள்ள இந்திய தூதரகமும், கொரோனாவுக்கெதிரான போராட்டத்தில் இந்தியர்களுடன் நாங்களும் நிற்கிறோம் என்பதைக் காட்டும் வகையில், 1000 மீற்றருக்கும் அதிகமான பரப்பில் இந்திய மூவர்ணக்கொடி Zermattஇன் Matterhorn மலையில் ஒளிரச்செய்யப்பட்டுள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்வீட்டில், உலகமே இணைந்து கொரோனாவுக்கெதிராக போராடுகிறது, மனித சமுதாயம் நிச்சயம் இந்த கொள்ளை நோயை வெல்லும் என்று பதிவிட்டுள்ளார்
சுவிஸ் மலைச்சிகரத்தில் பிரமாண்டமாய் ஒளிர்ந்த இந்திய தேசியக்கொடி! Reviewed by Author on April 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.