அண்மைய செய்திகள்

recent
-

குளிக்கும்போது சிறுநீர் கழிக்கும் பழக்கம்..இது நன்மையா?..... தீமையா? -


">சிலர் குளிக்கும் போது சிறுநீர் வருவது போல் ஒரு உணர்வு தோன்றும். அப்போது குளிக்கும்போது சிறுநீர் கழிப்பார்கள். அவ்வாறு செய்வது உண்மையில் நல்ல விஷயம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
நாம் கழிக்கும் சிறுநீரில் எலக்ட்ரோலைட்ஸ், யூரியா போன்ற ஆரோக்கியமான சத்துகள் இருக்கின்றன. இதில் பாக்டீரியாக்களும் குறைவாகவே இருக்கிறது. குளிக்கும்போது உடலில் படும்படி சிறுநீர் கழிப்பதால் எந்த தொற்றும் ஏற்படாது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் சிறுநீர் சருமத்திற்கும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது சருமப் பாதுகாப்பிற்காக காஸ்மெடிக்ஸ் பொருட்களிலும் யூரியா சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே இயற்கையான சிறுநீரில் இது இருப்பது மிகவும் நன்மை பயக்குமாம்.

பொதுவாக, குளிக்கும்போது சிறுநீர் கழிக்கும் பழக்கத்தைப் பலர் செய்கின்றனர். 79 சதவீத மக்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஒருமுறையாவது குளிக்கும்போது சிறுநீர் கழித்திருக்கலாம் என ஆய்வுகள் சொல்கின்றன.
இருப்பினும் குளிக்கும்போது சிறுநீர் கழிப்பதை நினைத்து அச்சப்படத்தேவையில்லை. குளிக்கும்போது சிறுநீர் வெளியேறுவதால் அதில் உள்ள யூரிக் அமிலம், அம்மோனியா ஆகியவை நமது பாதங்களில் பூஞ்சை தொற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்க உதவுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இதில் முக்கிய விஷயம் அவற்றை செய்யும்போது மற்றவர்களும் அந்த பாத்ரூமை பயன்படுத்துகிறார்கள் எனில் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்.
எனவே இனி குளித்துக் கொண்டிருக்கும்போது சிறுநீர் வந்தால் தயங்காமல் கழிக்கலாம்.

குளிக்கும்போது சிறுநீர் கழிக்கும் பழக்கம்..இது நன்மையா?..... தீமையா? - Reviewed by Author on April 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.