அண்மைய செய்திகள்

recent
-

எங்களைப் போன்றவர்களை அரசியலுக்கு பயன்படுத்த முடியுமா?என்பதனை இம்முறை மக்கள் தீர்மானித்து விடை தரட்டும்-வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்.

 
எங்களைப் போன்றவர்களை அரசியலுக்கு பயன்படுத்த முடியுமா?என்பதனை  இம்முறை மக்கள் தீர்மானித்து விடை தரட்டும்-தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்.


மக்கள் நம்பிக்கையுடன் கட்சிகளை நம்பி தங்களுடைய வாக்குகளை ஒவ்வொறு முறையும் வழங்கி வருகின்றனர். ஆனால் மக்களது வாழ்க்கைத்தரத்திலோ அல்லது அடிப்படை பிரச்சினை சம்மந்தமாகவோ எந்த அளவுக்கு நாங்கள் சாதித்து இருக்கின்றோம் என்று நாங்கள் சிந்திக்க வேண்டிய ஒரு விடையமாக உள்ளது என வ டமாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.   
 
-மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(28) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

எமது மக்கள் முழுமையாக சந்திக்கின்ற ஒரு தேர்தலாக பாராளுமன்ற தேர்தல் அமைந்துள்ளது.ஒவ்வொறு தேர்தல்களும் முடிவடைந்ததன் பின்னர் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறிப்பாக உரிமை, பொருளாதாரம்,அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளில் எந்த அளவிற்கு முன்னேற்றத்தை கொண்டு வரக்கூடியதாக இருந்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஆனால் எங்களுடைய மக்களுக்கு இத்தேர்தல் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. மக்கள் நம்பிக்கையுடன் கட்சிகளை நம்பி தங்களுடைய வாக்குகளை ஒவ்வொறு முறையும் வழங்கி வருகின்றனர்.

ஆனால் மக்களது வாழ்க்கைத்தரத்திலோ அல்லது அடிப்படை பிரச்சினை சம்மந்தமாகவோ எந்தளவுக்கு நாங்கள் சாதித்து இருக்கின்றோம் என்று நாங்கள் சிந்திக்க வேண்டிய ஒரு விடையமாக உள்ளது.

இம்முறை இடம் பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் ஒரு வித்தியாசமான சூழ்நிலையினை எதிர் நோக்க உள்ளோம். அரசியல் கட்சிகளுக்கு இடையில் ஒரு குழப்பகரமான சூழ் நிலைகளும் காணப்படுகின்றது.

பெரும்பான்மை கட்சிகளுக்கு இடையே குழப்பம்.வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கைக்குறியதாக இருந்த கட்சிக்கு இடையே குழப்பம். கட்சி உற்பூசல்கள் போன்ற பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியிலே தற்போது கொரோனா வைரஸின் தாக்கத்தினால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பொருளாதார ரீதியில் மிகவும் பாதீப்பை அடைந்து தங்களது வாழ்வாதார பிரச்சினையில் சிக்கியுள்ள எங்களுடைய மக்கள் மத்தியில் இத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எவ்வாறு இருந்தாலும் தேர்தலில் கலந்து கொண்டு வாக்களிப்பதற்கு எமக்கு கடமை உள்ளது. மக்கள் நூறு வீதமான வாக்குகளை செலுத்தினாலும் அல்லது குறைந்த அளவு வாக்குகள் செலுத்தப்பட்டாலும் பாராளுமன்றம் செல்லப்போகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறப்போவது இல்லை.

ஆகவே எங்களுடைய மக்கள் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும்.இம்முறை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.பல கட்சிகள் இம்முறை போட்டியிடுகின்றனர். வன்னியில் கட்சிகளோடு அதிகலவான சுயேட்சைக்குழுக்கள் கள மிறக்கப்பட்டுள்ளது. 
எல்லா கட்சிகளும்,சுயேட்சைக்குழுக்களும் மக்களை குழப்பி வாக்கை சிதரடிக்கச் செய்து மக்களின் பலத்தை குறைப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

-மக்கள் இம்முறை சிந்தித்து சரியான முடிவை எடுப்பார்கள் என நான் நம்புகின்றேன். எமது மக்கள் தமது தேர்தல் அரசியல் மூலம் எமது நாட்டின் ஜனாதிபதியை தீர்மானித்துள்ளார்கள். மாற்றி இருக்கின்றார்கள். குறிப்பாக எமது மக்களே கூட்டமைப்பிற்கும் கை கொடுத்துள்ளது.

 ஒவ்வொரு முறையும் அரசாங்கத்தில் மாற்றம் வர வேண்டும், ஜனாதிபதியை மாற்ற வேண்டும் என்று தீர்மானிக்கின்ற மக்களும், மக்கள் வாக்களித்த கூட்டமைப்பினரும் தங்களுக்கு உள்ளே உள்ள முறண்பாடுகளை சீரமைக்க வேண்டும். தங்களுக்குள்லேயே மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று ஒரு நாளும் முயற்சிக்கவில்லை.மாற்றத்தையும் அவர்கள் விரும்பவில்லை.
தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக அல்லது பதவிகளுக்காக தங்களுக்குள்லேயே உள்ள குறைபாடுகளை களைந்துகொள்ள கூட்டமைப்பு ஒரு போதும் முயற்சிக்கவில்லை.

அதற்கு முக்கிய காரணம் அங்கு இருக்கின்ற அரசியல் தலைவர்கள் தொடர்ந்தும் தாங்கள் மட்டும் அப்பதவியில் இருக்க வேண்டும் என்கின்ற ஒரே ஒரு சுயநலமே காரணமாக உள்ளது.

ஆகவே இம்முறை நாங்கள் இவ்வளவு காலமும் நம்பி இருந்த கூட்டமைப்பின் உள்ளே குழப்பங்கள் நிலவுகின்றது.விருப்பு வாக்கிற்காக கூட்டமைப்பைச் சேர்ந்த வேட்பாளர்களே தங்களுக்குள் மர்மப்போரை நிகழ்த்தி வருகின்றனர். மர்மமான முறையில் விருப்பு வாக்கிற்கான வேட்டையை நிகழ்த்தி வருகின்றனர்.

ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்ற இந்த நேரத்தில் இம்முறை மக்கள் எங்களைக் கூட கேட்கலாம் நீங்கள் கூட உங்களுக்கு உள்ளே உள்ள குறைபாடுகளை தீர்க்காமல் வெளியில் நின்று விமர்சிப்பது தவறு என்று கூறலாம்.

ஆனால் அதற்குள்லேயே எங்களுக்கு சரியான வாய்ப்பு வழங்கப்படுகின்றதா? எங்களுடைய கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படுகின்றதா? எங்களைப் போன்றவர்கள்  அரசியலுக்கு வருகின்ற போது எங்களை எந்த அவ்வாறு கட்சிகள் பயன் படுத்துகின்றது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இம்முறை இக்குழப்பத்தின் அடிப்படையில் நாங்களும் வன்னி தேர்தல் தொகுதியிலே முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களின்  தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கட்சியில் நானும் ஒரு வேட்பாளராக போட்டியிடுகின்றேன்.

நான் இம் முறை என்னுடைய அரசியல் பிரவேசம், அல்லது என்னுடைய அரசியலினால் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகள் தொடர்பாகவும் எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் மக்களிடம் தான் தீர்ப்பை எதிர் பார்த்துள்ளேன்.

எங்களைப் போன்றவர்களை அரசியலுக்கு பயன்படுத்த முடியுமா? எ;னபதனை இம்முறை மக்கள் தீர்மானித்து விடை தரட்டும். அரசியலுக்குள் இருந்து சேவை செய்வதற்கான வாய்ப்பை மக்கள் எங்களுக்கு தருவார்களாக இருந்தால் தொடர்ந்து சேவை செய்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.

நான் தேவையில்லை. அரசியலை விட்டு ஒதுங்க வேண்டும் என மக்கள் நினைத்தால் அல்லது தீர்ப்பை,கருத்தை வழங்கினால் அரசியலில் இருந்து நிறந்தரமாகவு ஓய்வு பெற்றுச் செல்ல நான் தயாராக இருக்கின்றேன்.

மக்கள் வழமை போல் சிந்திப்பது போல் கட்சி அரசியலை மட்டும் யோசிக்காது கட்சி அரசியலினால் இவ்வளவு வருடங்களாக என்ன என்ன நடை பெற்றது என்பதனை சிந்தித்து இம் முறை சற்று வித்தியாசமாக யோசிக்க வேண்டிய கடமையில் இருக்கின்றார்கள்.

எனவே இச்சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி எமது தேவைகளையும் , கொள்கைகளையும் நிறைவேற்றக்கூடிய , பொருளாதாரம், அடிப்படை  உரிமைகளையும் பெற்றுக் கொள்ளக்கூடிய நடைமுறைக்கு சாத்தியமான விடையங்களை செய்யக்கூடிய கட்சி,அதற்கு மேலதிகமாக செய்யக்கூடிய நபர்களையும் சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

மக்களின் முடிவுதான் முக்கியமானதாக உள்ளது.பிரச்சாரங்களை பாரிய அளவில் முன்னெடுக்க முடியாத நிலையில் சூழல் உள்ளது.

எனவே மக்கள் இயன்ற அளவிற்கு தேர்தல் தொடர்பான விபரங்களை பெற்று உங்களின் கடமையை,உரிமையை சாரியாக செய்ய வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
எங்களைப் போன்றவர்களை அரசியலுக்கு பயன்படுத்த முடியுமா?என்பதனை இம்முறை மக்கள் தீர்மானித்து விடை தரட்டும்-வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன். Reviewed by Author on June 28, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.