அண்மைய செய்திகள்

recent
-

சாத்தான்குளத்தில் கொல்லப்பட்ட ஜெயராஜின் மகளுக்கு அரசு வேலைக்கான நியமன ஆணை......

சமீபத்தில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய சாத்தான்குளபொலிஸ் விசாரணையின்போது கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (திங்கட்கிழமை) வழங்கியுள்ளார்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் பொலிஸ் விசாரணையின்போது கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.

இந்த இரட்டைக்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர்
எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி, ஜெயராஜின் மூத்த மகளும், பென்னிக்சின் சகோதரியுமான பெர்சிக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய
 இளநிலை வருவாய் ஆய்வாளர் பணிக்கான நியமன ஆணையை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
பணி நியமன ஆணையைப் பெற்றுக்கொண்ட பின்னர்
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பெர்சி, சோதனையில் இருந்து மீள்வதற்காக அரசு தனக்கு பணி வழங்கியிருப்பதாக கூறினார்.

தன் தந்தை, சகோதரர் மரணத்தில் நீதியை நிலைநாட்ட தமிழக அரசு உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.கொலை வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்றும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது..



சாத்தான்குளத்தில் கொல்லப்பட்ட ஜெயராஜின் மகளுக்கு அரசு வேலைக்கான நியமன ஆணை...... Reviewed by Author on July 28, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.