அண்மைய செய்திகள்

recent
-

பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றாக செயற்படுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்கு நிச்சயமாக நாங்கள் முயற்சி செய்வோம்

 தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்ணேஸ்வரன் தெரிவித்திருந்தார்.குறித்த விடையம் வரவேற்கத்தக்கது. அதே போல் கஜேந்திர குமார் பொன்னம்பலம் இதில் இணைந்து கொள்ள வேண்டும்.

பாராளுமன்றத்திற்கு உள்ளே நாங்கள் எல்லோரும் ஒன்றாக செயற்படுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்கு   நிச்சயமாக நாங்கள் முயற்சி செய்வோம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (8) சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே வெர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில சிந்தனைகளை கொள்ள வேண்டும் என்பதிலே மக்கள் தங்களுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்கள்  என்பது தான் என்னுடைய கருத்து.

ஒற்றுமை இன்மை என்பது வெளிப்படையாக மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒற்றுமை இல்லாமல் செயல்பட வேண்டாம் என்ற அந்த நிலைப்பாட்டில் மக்கள் தங்களுடைய வாக்குறிமையை பயண்படுத்தி உள்ளனர்.அந்த வகையில் 14 ஆசனங்களை கொண்ட நாங்கள் இன்று 10 ஆசனங்களுடன் இருக்கின்றோம்  என்றால் சிந்திக்கப்பட வேண்டிய விடையம்.

 மக்கள் மத்தியில் எங்களுடைய செயற்பாடுகள் இனி வரும் காலங்களில்   துரிதமாக அபிவிருத்தி சம்பந்தமாக சிந்திக்க வேண்டும் என்பது இன்று நாங்கள் உணர்ந்த விடையம்.

மேலும்; தமிழ் தரப்பில் யாழ்ப்பாணத்தை பொருத்த மட்டில் எல்லா கட்சிகளும் கூடுதலாக தமிழர் தரப்பான கட்சிகளுக்கு மக்கள் ஆணை தந்துள்ளார்கள்.

சமமான முறையில் தேசியக்கூட்டமைப்பு 3 ஆசனங்களையும் கொண்டாலும் ஏனையவர்கள் வாக்குகளைப் பெற்று ஆசனங்களைப் பெற்று  இருக்கின்றார்கள்.

மக்களுடைய விருப்பம் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்படவதே.முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்ணேஸ்வரன் தான் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்திருந்தார்.குறித்த விடையம் வரவேற்கத்தக்கது.அதே போல் கஜேந்திர குமார் பொன்னம்பலம் இதில் இணைந்து கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட நபர்கள் மீது விருப்பு வெறுப்புகளை ஒரு பக்கம் வைத்து விட்டு   தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக நாங்கள் செயல்பட வேண்டும். பாராளுமன்றத்திற்கு உள்ளே நாங்கள் எல்லோரும் ஒன்றாக செயற்படுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்கு   நிச்சயமாக நாங்கள் முயற்சி செய்வோம்.

அந்த வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடும்,முன்னாள் முதலமைச்சர் விக்ணேஸ்வரன் அவர்களோடும் நாங்கள் பேச இருக்கின்றோம்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள்  ஒரு பக்கம் வைத்து விட்டு எங்களுடைய மக்கள் சார்ந்த விடயங்களில் நாங்கள் ஒன்றாக செயற்படுவதற்கான   முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ள இருக்கின்றோம்.

எங்களுடைய போராட்டத்தில் ஆயுதம் ஏந்தி போராடி இன்றைக்கு ஒரு அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வமாய் இருக்கின்ற போராளிகள் தனித்துவத்தோடு இருப்பதாக தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ)  அமைப்பு  இயங்குவது போல விடுதலைப் புலிகள் அமைப்பில் தாங்கள் ஒரு தனித்துவத்தோடு விடுதலைப்புலிகளின் அமைப்பாக இயங்குவதற்கான ஒரு சந்தர்ப்பங்களோடு அவர்களைச் சேர்த்துக் கொள்ளுகின்ற,மேலும் ஈரோஸ் போன்ற ஆயுதப் போராட்டத்தில் தங்களை களம் இறக்கிய அனைத்து கட்சிகளுடனும் நாங்கள் பேசி இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை பங்குதாரர்களாக மாறுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டுள்ளோம்.

அதற்கான முயற்சிகளை மேற்கௌ;ள இருக்கின்றோம்.எங்களுடைய செயல் திட்டம் என்பது தொடர்பாக பார்த்தோம் என்றால் சிறிலங்கா பொதுஜன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு வாக்குகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

எங்களுடைய பிரதேசத்தில் மக்களுடைய சிந்தனை எப்படி என்றால் அபிவிருத்தி சம்பந்தமாக தங்களுடைய கஸ்டங்களை போக்குகின்ற என்ற ஒரு நிலையை இந்த தேர்தலில் வாக்களிப்பின் ஊடாக காட்டியுள்ளார்கள்.

 தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்த மட்டில் அபிவிருத்தி சம்மந்தமாக நிச்சையமாக மக்கள் தன்னுடைய கிராமத்தில் எல்லா வசதிகளோடும் இருக்கின்ற வகையில் உணரக்கூடிய  வகையில் எங்களுடைய செயல்பாடுகள் அமைய வேண்டும்.அதற்காக நாங்கள் நிச்சயமாகச் செயல் படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவோம்.

அபிவிருத்தி என்பது முக்கியமான விடையம். அந்த அபிவிருத்தி இல்லாத காரணத்தால் தான் கண்டவர்களும் எமது   தேசத்துக்குள் மூக்கை நுழைக்கின்ற  செயல்பாடு அமைந்திருக்கின்றது.

இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு என்பது அரசாங்கத்தோடு மட்டும் தான் அந்த வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று இல்லை.

அவர்கள் சொந்தக் காலில் நிற்க அதற்கான ஒரு வசதி வாய்ப்புக்களை செய்து கொடுக்க முடியும்.அந்தத் திட்டங்களை நாங்கள் உடனடியாக நடைமுறைப் படுத்துவதற்கான செயற்பாடுகள் கண்டிப்பாக செய்வோம்.

ஏங்களுடைய தேசத்தில் இனி சிங்கள கட்சிகளுக்கு அல்லது சிங்கள கட்சிகளோடு இணைந்து இருந்த தமிழர்களுக்கு, சிங்கள கட்சிகளுடன் உள்ள முஸ்லிம்   வேட்பாளர்களுக்கு எங்களுடைய தமிழ் வாக்குகள் செல்லாத ஒரு நிலையை நாங்கள் உருவாக்க வேண்டும்.

இது ஒரு செய்தியாக மக்கள் எங்களிடம் கையளித்துள்ளனர்.எனவே இந்த விடையங்களை  நாங்கள் கையண்டு எங்களுடைய மக்களின்  அன்றாட பிரச்சனையை ஒரு கிராமத்தில் வாழுகின்ற குடும்பம் எல்லா வசதிகளுடனும் இருப்பதாக உணரும் வாய்ப்பை நாங்களும் ஏற்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்து செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

ஆகவே இந்த தேர்தலில் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு 10 ஆசனங்களை பெற்றுத்தந்துள்ளனர்.
தமிழீழ  விடுதலை இயக்கம் தமிழ் மக்களுக்காக என்றைக்கும் குரல் கொடுக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அநீதிகள்  ஏற்பட்டால் அதையும் தட்டிக்கேட்கும்.

அந்த வகையில்   இனி தவறுகள் எந்த இடத்தில் இருந்து வந்தாலும் அதை தட்டிக் கேட்கின்ற கடமை எங்களிடம் இருக்கின்றது.
அதை நாங்கள் நிச்சையமாக செய்து கொள்ளுவோம்.10 ஆசனங்கள் கிடைத்திருக்கிறது. அதில் குறிப்பாக மூன்று ஆசனங்கள் தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு கிடைத்துள்ளது.போராட்டக்கட்சிகள் என்று பார்க்கின்ற போது 4 ஆசனங்கள் எமது பக்கம் இருக்கின்றது.

எங்களுடைய மக்களுக்கு எனது நன்றியை  தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.வன்னி மாவட்டத்தில் 405   வேட்பாளர்கள் போட்டியிட்ட  அந்த சூழலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை மேலும் உயர்த்தி வைத்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்ள  விரும்புகின்றேன்.

-மேலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் என்ற ஒரு சர்ச்சை   தற்போது எழுந்துள்ளது.
தேசியப்பட்டியல் ஆசனம் நியாயமான முறையில் வழங்கப்பட வேண்டும். என்னை பொருத்த மட்டில் மக்கள் நிறாகரித்தவர்களுக்கு என்ன செய்வது என்பது தொடர்பாக சிந்திக்க வேண்டும்.

 தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்த மட்டில் அங்கே இருக்கின்ற பங்காளிக் கட்சிகளோடு சேர்ந்து தான் ஒரு முடிவு எட்டப்பட வேண்டும்.

 தமிழரசுக் கட்சி தனியாக முடிவு எடுக்க கூடாது என்பது எனது கருத்து.   நாங்கள் மூன்று கட்சிகளும் இணைந்து யாரை போடுவது என்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.

இந்த விடயத்தில் எல்லாருக்கும் உரித்து உள்ளது இந்த தேசியப்பட்டியல் சம்பந்தமாக.யாரும் நினைத்தவரை கொண்டு வருவதற்கான வாய்ப்பினை ஒரு போதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

ஆகவே எங்களுடன் பேச வேண்டும். இந்த பேச்சுவார்த்தையின் ஊடாக நாங்கள் ஒற்றுமையான ஒர தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

எனவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள இந்த ஆசனம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தாத வகையில் அமைந்திருக்க வேண்டும்.

 வடக்கு கிழக்கில் நாடாளுமன்ற ஆசனங்கள் எல்லா இடத்திலும்   இருந்தாலும் அம்பாரை புறக்கனிக்கப்பட்டுள்ளது.
அதனையும் நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

யாழ்ப்பாணம்,வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, ஆகிய மாவட்டங்களில் தமிழ் பிரதி நிதித்தவங்கள் இருக்கின்றது.  ஆனால் அம்பாரை பிரதேசத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லை.

அந்த பிரதி நிதித்தவத்தை அம்பாரைக்கு ஏன் கொடுக்கக்கூடாது? என்பது எனது கருத்து.
ஆனால் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதில் முடிவு ஏடுக்க வேண்டிய பொறுப்பு  மூன்று கட்சிகளிடம் இருக்கிறது. இந்த விடையம் தொடர்பில் பேசி ஒரு இனக்கப்பாட்டிற்கு வர வேண்டும்.

தேசியப்பட்டியலில் முக்கியமானவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதி சட்டத்தரணி தவராஜா குறித்த பட்டியலில் இருக்கின்றார்.மேலும் பெண் பிரதி நிதித்தவம் என்ற வகையில் கடந்த முறை நாங்கள் ஒரு பெண் பிரதி நிதித்துவத்திற்கு ஆசனம் வழங்கி இருந்தோம்.

அதனையும் நாங்கள் யோசிக்க வேண்டும்.இ ந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இந்த இந்த தேசியப்பட்டியல் பிரச்சினை முடிந்தது என்று மக்களிடம் ஒரு சலசலப்பு இல்லாமல்  நாங்கள் நிதானமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் மூன்றும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும். நினைத்ததை முடிவெடுக்கின்ற நிலை இனி வரும் காலங்களில் இருக்க முடியாது.என அவர் மேலும் தெரிவித்தார்...
 
பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றாக செயற்படுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்கு நிச்சயமாக நாங்கள் முயற்சி செய்வோம் Reviewed by Author on August 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.