அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரிலும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு நீதி மன்றம் தடை

 தியாக தீபம் திலீபனின் நினைவு நாளை நினைவு கூர்வதற்கு மன்னார் நீதவான் நீதி மன்றத்தால் இன்றைய தினம் தடை விதிக்கப்பட்டுள்ளது.


  மன்னார் நீதி மன்ற அதிகார எல்லைக்குள் தியாகி திலீபனின் நினைவஞ்சலில் நிகழ்வை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல்களுக்கு அமைவாக தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலை புலிகளை மீள் எழுச்சி செய்யும் நோக்கில் நித்திலம் பதிப்பகத்தின் உரிமையாளர் சிவகரன் மன்னார் நகரமுதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மன்னார் நகரசபை உப தவிசாளார் செபஸ்டியன் ஜான்சன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடாக ஏற்பாடு மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.



  அதே நேரத்தில் நினைவஞ்சலி நிகழ்வு நடாத்துவதால் குறித்த வீதியில் வாகன நெரிசல் ஏற்படும் என்பதுடன் இவ் நிகழ்சியில் கலந்து கொள்ளும் மக்களுக்கு கிளர்சிபற்றிய எண்ணங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமாதான சூழலுக்கும் இவை பங்கம் ஏற்படுத்தும் என்பதாலும் 2020-09-15 தொடக்கம் 2020-09-28 வரையான காலப்பகுதியில் மன்னார் நீதவான் நீதிமன்ற அதிகார எல்லைக்குள் நினைவேந்தல் நிகழ்வு நடாத்துவதற்கு உடனடி தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது 


 அத்துடன் சிவகரன் மன்னார் நகரமுதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மன்னார் நகரசபை உப தவிசாளார் செபஸ்டியன் ஜான்சன் வன்னி பாரளுமன்ற உறுப்பினர் சால்ஸ்நிர்மலநாதன்,செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை 2020-09-28 காலை 09 மணியளவில் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மன்னாரிலும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு நீதி மன்றம் தடை Reviewed by NEWMANNAR on September 15, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.