அண்மைய செய்திகள்

recent
-

உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு சமுர்த்தி வங்கிகளின் செயற்பாடுகள் கணணி மயப்படுத்தப்பட்டு(Online) மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட உடையார் கட்டு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரு சமுர்த்தி வங்கிகளின் செயற்பாடுகள் கணணி மயப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய செயற்பாட்டின் தரவுப் பதிவேற்ற வேலைத்திட்டம் நிறைவடைந்ததை தொடர்ந்து கணணி மயப்படுத்தப்பட்ட வங்கி சேவைகளை மக்கள் மயப்படுத்தப்படும் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த சனிக்கிழமை(21) புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயக்காந் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த கணினி மயப்படுத்தப்பட்ட வங்கிச் சேவைகளை ஆரம்பித்து வைத்தார். இதனூடாக வழமையான வங்கி சேவைகளை கணினி மயமாக்கல் ஊடக இலத்திரனியல் புத்தகம் வழங்கி அதனூடாக வங்கிச் சேவைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் வங்கியின் வழமையான சேவைகளை கணனி மயப்படுத்தலூடாக மக்கள் பெற்றுக் கொள்ள முடியும். இந் நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், மாவட்ட கருத்திட்ட முகாமையாளர், மாவட்ட சமுர்த்தி உள்ளகக் கணக்காய்வாளர்கள், பிரதேச செயலக சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கணனி மயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறாவது வங்கியாக உடையார்கட்டு சமுர்த்தி வங்கியும், ஏழாவது வங்கியாக புதுக்குடியிருப்பு சமுர்த்தி வங்கியும் கணினி மயமாக்கப்பட்ட சேவைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு சமுர்த்தி வங்கிகளின் செயற்பாடுகள் கணணி மயப்படுத்தப்பட்டு(Online) மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளன. Reviewed by Author on November 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.