அண்மைய செய்திகள்

recent
-

தமிழகத்தில் ஒருவர் உட்பட இந்தியாவில் 6 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸின் புதிய வகை இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது என இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆறு பேருக்கு இந்தத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

இவர்கள் ஆறு பேரும் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்கள். இந்த நிலையில், பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 17 பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸின் புதிய திரிபின் பாதிப்பு உள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

 இவர்களில் மூவருக்கு பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸ் ஆய்வகத்திலும், இருவருக்கு ஹைதராபாத்தில் உள்ள சென்டர் ஃபார் செல்லுலர் அண்ட் மாலிக்யூலர் பயாலஜி ஆய்வகத்திலும், ஒருவருக்கு புனேவிலும் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி ஆய்வகத்திலும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முந்தைய கொரோனா வைரஸ் திரிபைவிட, 70% சுலபமாகப் பரவக்கூடிய புதிய திரிபு பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அது தடுப்பூசி ஆராய்ச்சியில் பெரிய பாதிப்பை உண்டாக்காது.









தமிழகத்தில் ஒருவர் உட்பட இந்தியாவில் 6 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று Reviewed by Author on December 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.