அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச பாவனையாளர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு விசேட மன்னாரில் விழிப்புணர்வு நிகழ்வு

"zero Accidents" எனும் தொணிப்பொருளில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் ஏற்பாட்டில் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் ஒழுங்கமைப்பில் விசேட நடமாடும் விழிப்புணர்வூட்டல் நிகழ்சித் திட்டம் மன்னார் நகர் மத்திய பகுதியில் இன்று திங்கட்கிழமை(15) காலை 9 மணியளவில் இடம் பெற்றது. வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கத்துடனும் போக்குவரத்து பயணங்களின் போது தரமான தலைக்கவசங்களை அணிவதன் முக்கியத்துவம் தொடர்பாக மேற்படி விழிப்புணர்வு நிகழ்சி திட்டத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. 

 அதே நேரம் இலங்கை தரச் சான்று நிறுவனத்தின் அனுமதி அற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தலைக்வசங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் அது தொடர்பான விழிப்புணர்வும் அவ்வாறான தலைக்கவசங்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் துண்டு பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டது. 

 குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை ஊழியர்கள் வீதி போக்குவரத்து பொலிஸார் மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது














சர்வதேச பாவனையாளர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு விசேட மன்னாரில் விழிப்புணர்வு நிகழ்வு Reviewed by Author on March 15, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.