அண்மைய செய்திகள்

recent
-

மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்!வழக்கு விசாணைகள் எதிர்வரும் 05.10.2022அன்று

மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் 05.10.2022 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பல நோக்கு கூட்டுறவு சங்க மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 17.06.2022 அன்று எரிபொருள் விநியோக நடவடிக்கை இடம்பெறும் என்ற பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவுறுத்தலுக்கமைய அன்று அதிகாலை முதல் 2 கிலோ மீற்றர்களுக்கு அதிகமான நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். 

மாலை வேளையில் அங்கு குழப்ப நிலை உருவாகியுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த செய்தியினை சக ஊடகவியலாளருடன் அறிக்கையிட சென்ற சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவரகள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் செய்தி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சமயம் அங்கு வருகை தந்த இனம்தெரியாத நபரொருவரால் இராணுவம் மற்றும் பொலிசாரின் முன்னிலையில் தாக்குதலுக்கு உள்ளாகினார். அருகிலிருந்த பொதுமக்கள் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியவரை தடுத்து நிறுத்தினர் இதனை தொடர்ந்து ஊடகவியலாளரால் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.இதன் பின்னணியில் விசாரணைகளை முன்னெடுத்த மல்லாவி பொலிசார் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய 2 பகுதி அனிஞ்சியங்குளம் மல்லாவி பகுதியை சேர்ந்த அன்புநாதன் தினேஷ்குமார் என்பவரை 19.06.2022 அன்று கைது செய்து பொலிஸ் பிணையில் விடுவித்ததோடு 22.06.2022 அன்று மாங்குளம் சுற்றுலா நீதிமன்றுக்கு வருகை தருமாறு அழைத்திருந்தனர் 

 இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மல்லாவி பொலிசாரால் நபருக்கு கையினால் அடித்தமை (பிரிவு-314) என்ற அடிப்படையில் 22.06.2022 அன்று மாங்குளம் சுற்றுலா நீதிமன்றில் B /648/22 வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன இதன்போது நீதிமன்றிலே நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளில் ஊடகவியலாளர் சார்பில் சட்டத்தரணி ருஜிக்கா நித்தியானந்தராசா அவர்கள் முன்னிலையாகியிருந்தார் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சார்பில் சட்டத்தரணி ரி.பரஞ்சோதி அவர்களும் சுபா விதுரன் அவர்களும் முன்னிலையாகியிருந்தனர் 

 ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சார்பில் ஆயரான சட்டத்தரணிகள் தங்களுக்கு ஊடகவியலாளர் என்று தெரியாமலே குறித்த சம்பவம் இடம்பெற்றதாகவும் குறித்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்து பிணை கோரினர் இதையடுத்து நீதிபதி ரி.சரவணராஜா அவர்கள் குறித்த நபரை 200000 ரூபா ஆட்பிணையில் செல்ல அனுமதித்ததோடு ஊடகவியலாளரின் பாதுகாப்புக்கு எந்தவிதத்திலும் இடையூறு செய்யக்கூடாது எனவும் தெரிவித்து குறித்த வழக்கினை எதிர்வரும் 05.10.2022 திகதிக்கு தவணையிட்டார்




மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்!வழக்கு விசாணைகள் எதிர்வரும் 05.10.2022அன்று Reviewed by Author on June 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.