அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி ராமேஸ்வரம் கடலில் தேசிய கொடி ஏந்தி 75 நிமிடம் மிதந்து 'ஜல' யோகா செய்த சமூக ஆர்வலர்

இந்திய நாட்டின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி ராமேஸ்வரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் இன்று (13) இரு கைகளிலும் தேசிய கொடியை ஏந்தி பாக் ஜலசந்தி கடலில் ஜல யோகா செய்து தொடர்ந்து 75 நிமிடம் மிதந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15 வரை நாடு முழுவதும் அனைத்து வீடுகளில் தேசிய கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். 

 இந்நிலையில், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் அருகே உள்ள படகு இல்லம் அமைந்துள்ள பாக் ஜலசந்தி கடலில் சுமார் 10 அடி ஆழத்தில் மிதந்தபடியே ராமேஸ்வரம் அடுத்த மெய்யம் புலி மீனவ கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சுடலை என்பவர் இரு கைகளிலும் தேசிய கொடியை ஏந்தி கடலில் ஜல யோகா செய்து 75வது சுதந்திர தினம் என்பதால் தொடர்ந்து 75 நிமிடம் மிதந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இரு கைகளில் தேசிய கொடியுடன் கடலில் மிதந்தவாறு யோகாவில் ஈடுபட்ட இவரது முயற்சியை அப்பகுதி மக்களும், மீனவர்களும் உற்சாகபடுத்தி பாராட்டினர். 

 இந்திய நாட்டின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி சமூக ஊடங்களில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை தேசிய கொடியை முகப்பு படமாக வைக்க வேண்டும் எனவும், இன்று (13) முதல் 15 வரை நாடு முழுவதும் அனைத்து வீடுகளில் தேசிய கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அதன் அடிப்படையில் தான் நான் இன்று கடலில் 75 நிமிடம் தொடர்ந்து மிதந்து விழப்புணர்வை ஏற்படுத்தியதுடன், நாட்டு மக்கள் இடையே ஒற்றுமை உணர்வு வளர வேண்டும் என அனைவரிடத்திலும் கேட்டுக்கொள்வதாக சுடலை தெரிவித்தார்.



இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி ராமேஸ்வரம் கடலில் தேசிய கொடி ஏந்தி 75 நிமிடம் மிதந்து 'ஜல' யோகா செய்த சமூக ஆர்வலர் Reviewed by Author on August 13, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.