அண்மைய செய்திகள்

recent
-

தாய்லாந்து வேன் விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட 11 பேர் பலி

மத்திய தாய்லாந்தின் மைத்ரபா நெடுஞ்சாலையில் இடம்பெற்ற பயங்கர கார் விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் இரண்டு சிறுவர்களும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வேன் நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி குழிக்குள் விழுந்து திடீரென தீப்பிடித்துள்ளது. அப்போது அதில் பயணம் செய்த 2 குழந்தைகள் உள்பட 11 பேர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

 எனினும்,வேனில் பயணித்த ஒருவர் மட்டுமே விபத்தில் உயிர் தப்பியுள்ளார். விபத்தில் உயிர் தப்பிய பயணி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தாய்லாந்து அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

தாய்லாந்து வேன் விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட 11 பேர் பலி Reviewed by Author on January 23, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.