அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஈழ போர் வரலாற்றின் முதன் பெண் போராளி மாலதியின் 36 வது நினைவு நாள் நிகழ்வு

 இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போரில் முதல் பெண் போராளியும் இந்திய இராணுவத்திற்கு எதிரான சமரில் முதலில் உயிர் தியாகம் செய்த இரண்டாம்  லெப் மாலதியின் 36 வது நினைவு நாள் நிகழ்வு நேற்றைய தினம் (10) மாலை 6 மணியளவில் அடம்பனில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.


1967 ஆம் ஆண்டு மன்னாரில் பிறந்த மாலதி வடக்கு கிழக்கு பகுதிகளில் இலங்கை இராணுவத்தாலும் இந்திய இராணுவத்தாலும் தமிழ் பெண்கள் படும் அவலத்தையும் அவர்கள் எதிர்கொண்ட துயரத்தையும் எண்ணி ஆயுதம் ஏந்தினார்.

 தனது 20 வது வயதில்  1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக நடைபெற்ற சண்டையில் நேருக்கு நேர் மோதி வீரச்சாவடைந்தார்.

.தமிழ் ஈழப்போர் வரலாற்றில் வீரசாவடைந்த முதல் பெண்ணாக மாலதி நினைவு கூறப்படுகிறார்.

 அவளின் உயிர் தியாகத்தையும் அவளின் துணிச்சலையும் கௌரவப் படுத்தும் முகமாக பின்னாலில் அவளின் வீரத்திற்கும் துணிச்சலுக்கும் மதிப்பளித்து மாலதியின் பெயரில் படையணிகளும் உருவாக்கப்பட்டது.

பெண்களாலும் ஈழ விடியலுக்காக போராட முடியும் என்பதை நிரூபித்து உயிர் திறந்த மாலதியின் நினைவு பலராலும் மறுக்கப்பட்டாலும் வருடா வருடம் அடம்பன் பகுதியில் அவளின் நினைவாக நினைவு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.

நேற்றைய குறித்த நினைவு அஞ்சலி நிகழ்வில் மாலதியின் பெற்றோர்கள் உறவினர்கள் இணைந்து மாலதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்திய மை குறிப்பிடத்தக்கது










மன்னாரில் ஈழ போர் வரலாற்றின் முதன் பெண் போராளி மாலதியின் 36 வது நினைவு நாள் நிகழ்வு Reviewed by Author on October 11, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.