அண்மைய செய்திகள்

recent
-

நீதிபதிக்கே உயிரச்சுறுத்தல்உள்ள நாட்டில் எமக்கான நீதி எப்போது? சர்வதேச சிறுவர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்.

 நீதிபதிக்கே உயிரச்சுறுத்தல்உள்ள நாட்டில் எமக்கான நீதி எப்போது? சர்வதேசமே கண்திறந்து பார்! எனும் கோரிக்கையுடன் சர்வதேச சிறுவர் தினமான இன்று தமது கையளித்த சிறுவர்களுக்கான நீதி கோரி வலிந்து  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்.ஒன்றை முன்னெடுத்தனர்


கடந்து 2027.03.08 முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளால் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சர்வதேச சிறுவர் தினமான இன்றைய தினத்தில் இராணுவத்திடம்  கையளித்த தமது சிறுவர்களுக்கான சர்வதேச  நீதி கோரியும் நீதிபதி பதவி விலக காரணமான அரசின் செயற்ப்பாட்டுக்கு எதிராகவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் அவர்களது போராட்ட இடத்திற்கு முன்பாக இன்று (01.10.2023) காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிபதிக்கே உயிரச்சுறுத்தல் உள்ள நாட்டில் எமக்கு நீதி எப்போது?,
சர்வதேசமே எமக்காக குரல் கொடுக்க எழுந்திரு, கையளிக்கப்பட்ட மாணவர்கள் எங்கே?’, ‘குடும்பமாக ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே?’, தமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா?, சின்னஞ்சிறு சிறார்களும் ஆயுதம் ஏந்தியவர்களா?, பாடசாலை சென்ற மாணவன் எங்கே? போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பினர்.

இலங்கையில் காணாமல்போன தமிழ் சிறுவர் மற்றும் குழந்தைகளின் ஒளிப்படங்களையும் இதன்போது கைகளில் ஏந்தியிருந்தனர்

போராட்டத்தில் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன், காணாமலாக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்

















நீதிபதிக்கே உயிரச்சுறுத்தல்உள்ள நாட்டில் எமக்கான நீதி எப்போது? சர்வதேச சிறுவர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம். Reviewed by Author on October 01, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.