அண்மைய செய்திகள்

recent
-

தேராவில் குளத்தை அண்டிய மக்களுக்கு தீர்வினை வழங்க விஷேட கலந்துரையாடல்.

 தேராவில் குளத்தை அண்டிய மக்களுக்கு தீர்வினை வழங்க விஷேட கலந்துரையாடல். 




தேராவில் குளத்து நீரை வெளியேற்றி மக்களது வாழ்க்கை நிலையை சுமூகமாக ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் (06.02.2024) 

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் சி.ஜெயக்காந்த் தலைமையில் இடம் பெற்றிருந்தது.


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் கடந்த மாதம் பெய்த அடை மழை காரணமாக தேராவில் குளத்தில் மேலதிக நீர் வெளியேறாது தடைப்பட்டுள்ளதால் குளத்தின் அருகாமையில் அமைந்துள்ள சுமார் பதினொரு வீடுகள் வெள்ளத்தால் மிகவும் மோசமாகப் பாதிப்புற்றதுடன் குறித்த வீட்டில் வசித்த மக்கள் இடம் பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.


இது குறித்து சம்பவ இடத்தை பார்வையிடுவதற்காக கடந்தமாதம் (31.01.2023) கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான காதர் மஸ்தான், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன், புதுக்குடியிருப்பு  பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் உட்பட பல அதிகாரிகள் வெள்ளத்தால் பாதிப்புற்ற தேராவில் பகுதிக்கு விஜயம் செய்து  அங்கு கிராம மக்களையும் இணைத்து விசேட கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் இது தொடர்பாக 6 ம் திகதி கலந்துரையாடி மக்களுக்கு விரைவாக தீர்வை பெற்றுக் கொடுப்பதாக கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான  காதர் மஸ்தான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.


இதற்கமையவே இன்றையதினம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மண்டபத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.


குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயக்காந்த்,


உடையார்கட்டு தெற்கு தேராவில் குளத்தை அண்டிய பகுதியை சேர்ந்த மக்களுடைய வதிவிடங்களிலே வெள்ளம் தேங்கி நிற்கின்ற அபாயம் மாத கணக்காக தொடர்கின்றது. அவர்களுடைய வாழ்க்கை நிலையை சுமூகமாக ஏற்படுத்துவதற்கான அதனை ஆராயும் கலந்துரையாடல் இன்று நடைபெற்றிருந்தது.


ஏ35 வீதியில் பாலத்தை அமைத்து வெள்ள நீரினை அகற்றுவது என்றும் அதற்காக பாலத்தை அமைப்பதற்கு 5.6 மில்லியன் ரூபா தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. அதனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினரின் நிதி ஒதுக்கீட்டில் தங்களுடைய பொறுப்பில் செய்து தருவதாக வாக்குறுதியளித்திருக்கிறார்கள். 

அதன் பணியை எதிர்வரும் திங்கட்கிழமை (12.02.2024) ஆரம்பிப்பதாக கூறியிருக்கின்றார்கள். 


அதேபோல் வாய்க்கால் வெட்டி அந்த வீதியை கடத்தி நீரினை வெளியேற்ற வேண்டும் அதற்கு 13.4 மில்லியன் ரூபா நிதி தேவை என கமநல உதவி ஆணையாளர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.  அதற்குரிய நிதியினை உடனடியாக தேட முடியாமல் உள்ளது. அவசரமான நிதியை வைத்துக் கொண்டு பிரதேச சபையின் கனரக வாகனங்களை கொண்டு எரிபொருளை வழங்குவது என்ற அடிப்படையில் அந்த வேலையை ஆரம்பிக்க இருக்கின்றோம்.


அந்தவகையில் அப்பகுதியில் இருக்கின்ற தேக்க மரங்களை  மரக்கூட்டுத்தாபனத்தின் உதவியுடன் தேவைக்கேற்ப வெட்டி அகற்றுவதற்கும் , அங்குள்ள சிறு புதர்களை வனவள திணைக்களத்தின் அனுசரணையை பெற்று கிராம மக்களின் சிரமதானத்தின் மூலம் அகற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது என தெரிவித்தார்.


குறித்த கலந்துரையாடலில் 

முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் பரணீதரன், முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் கோகுலன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், நில அளவை திணைக்களத்தினர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக காணி பயன்பாட்டு உத்தியோகத்தர் கமலநாதன், காணி குடியேற்ற அலுவலர், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் முரளீதரன், கிராம சேவையாளர்கள் மூங்கிலாறு கிராம சங்கத்தின் உபதலைவர் உதயன், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












தேராவில் குளத்தை அண்டிய மக்களுக்கு தீர்வினை வழங்க விஷேட கலந்துரையாடல். Reviewed by வன்னி on February 07, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.