அண்மைய செய்திகள்

recent
-

புதிய கடற்தொழில் சட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவில் நடைபெற்றுள்ளது!

 கடற்தொழில் அமைச்சினால் கடற்தொழிலாளர்கள் , நாட்டின் கடல் பாதுகாப்பு மற்றும் தொழில் நடவடிக்கைககள் தொடர்பிலான புதிய சட்டமூல வரைபு ஒன்று விரையில் சட்ட மூலமாக கொண்டுவரப்பட இருக்கும் நிலையில் இது தொடர்பிலான விளிப்புணர்வு மற்றும் கருத்தறியும் கலந்துரையாடல் ஒன்று  முல்லைத்தீவு கரைதுறைப்பற்று  பிரதேச சபை மண்டபத்தில்  முல்லைத்தீவு மீனவ சமூகம் மற்றும் அரசியல்வாதிகள், புத்திஜீவிகளை உள்ளடக்கி இன்று (18.04.2024) காலை நடைபெற்றது.



முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் க.மோகனகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள பணிப்பாளர் நாயகம் சுகந்த கஹவத்த கடற்தொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள்  உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டுள்ளார்கள்.


இதன்போது புதிய கடற்தொழில் சட்டமூலம் தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை எதிர்கட்சி தலைவரும் சட்டத்தரணியுமான சி.தவராசா அறிமுகப்படுத்தியுள்ளதுடன் விளகத்தினையும் கொடுத்துள்ளார்.


சட்டத்தில் சொல்லப்படும் நல்ல விடயங்கள் ஒன்றும் இவர்கள் நடைமுறைப்படுத்துவதில்லை என்று மீனவர்களின் கருத்து பொதுவாக சட்டமூலம் கொண்டு வந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். நடமுறையில் இது முல்லைத்தீவில் சாத்தியம் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது சுருக்கு வலை உள்ளிட்ட பல தொழில்கள் இங்கு சட்டவிரோதமான தொழில்கள் செய்துவருகின்றார்கள் அவர்களை கண்டுகொள்ளவில்லை. 


இந்த சட்டமூலத்தில் ஏதாவது பிழை இருந்தால் 15 நாட்களுக்குள் கடற்தொழில் அமைச்சின் செயலாளருக்கு எழுத்துமூலம் தெரியப்படுத்த பங்குபற்றிய வர்களுக்கு  ஆலோசனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது


 

புதிய கடற்தொழில் சட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவில் நடைபெற்றுள்ளது! Reviewed by Author on April 18, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.