அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் தொடர் ஓட்ட முறையில் (RELAY RACE) நீத்தி கடந்து சாதனை படைத்த 12 பேர்:

 இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் 12  நீச்சல் வீரர்கள், வீராங்கணைகள் தொடர் ஓட்ட முறையில் (RELAY RACE)  நீந்தி சாதனை படைத்தனர்.


மகாராஸ்ட்ரா மாநிலம் தானே பகுதியில் செயல்பட்டு வரும் ராம் சேது திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளையை சோந்நத மகராஸ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த 12   நீச்சல் வீராங்கணைகள்  இரண்டு  குழுக்களாக  பிரிந்து இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு வரை உள்ள சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக்ஜலசந்தி கடற்பரப்பினை நீந்தி கடப்பதற்காக இந்திய வெளியுறவுதுறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புதுறை அமைச்சகத்திற்க்கு  அனுமதி  கோரியிருந்தனர்.


இந்திய இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் வெள்ளிகிழமை  பிற்பகல் ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து இரண்டு படகுகளில் தங்கள் நீச்சல் பயிற்சியாளர் தலைமையில் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் இலங்கை தலைமன்னார் சென்றனர்.


தலைமன்னாரிலிருந்து சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு கடலில் குதித்து தொடர் ஓட்ட முறையில் (RELAY RACE)  நீந்த தொடங்கி 12 பேரும் மாலை  4.40 மணியளவில் (10 மணி நேரம் 20 நிமிடங்களில் நீந்தி) தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியை வந்தடைந்தார். நீந்தி சாதனை படைத்தவர்களை சுங்கத்துறை, மரைன் போலீசார், சுற்றுலாப்பயணிகள் அரிச்சல்முனையில் வரவேற்றனர்


.


தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் தொடர் ஓட்ட முறையில் (RELAY RACE) நீத்தி கடந்து சாதனை படைத்த 12 பேர்: Reviewed by Author on May 05, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.