அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் பறிபோகும் தமிழர் நிலம் திரைமறைவில் காய் நகர்த்தும் இராஜாங்க அமைச்சர்-வெளியான அதிர்ச்சி தகவல்

 வவுனியாவில் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் துனையுடன் தமிழ் கிராமங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படும் நிகழ்வு தற்போது திரைமறைவில் அரங்கேறி வருகிறது. 


இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது 


வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கூழாங்குளம் பகுதியில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பள்ளிவாசல் அமைப்பதற்கான முயற்சிகள் இராஜாங்க அமைச்சர் ஓருவரின் துணையுடன் அரங்கேறிவருகிறது.


ஆக்கிரமிப்பு செய்யப்படும் இவ் கிராமம் அமைந்துள்ள பிராமணாலங்குளம் கிராமசேவகர் பிரிவானது தொன்று தொட்டு வந்த ஒரு தமிழ் கிராமமாகும். குறித்த பிரிவில் மன்னார் வவுனியா வீதியில் அமைந்துள்ள ஒரு கிராமமே கூழாங்குளமாகும்.


1990க்கு முதல் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் காணப்பட்ட இக்கிராமம் பாரிய இடம்பெயர்வுகளின் பின் வெறும் 30 குடும்பங்களுடன் காணப்படுவதுடன் இக்கிராமத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தற்போது இந்திய முகாம்களில் உள்ளனர்.


இந்நிலையில்தான் இக்கிராமத்தின் மன்னார் வவுனியா வீதியை அண்டிய பெரும்பாலான நிலப்பகுதிகள் அருகில் உள்ள கிராமசேவகர் பிரிவு மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன் இப்பகுதியில் உள்ள பொதுக்காணி ஒன்றும் இராஜாங்க அமைச்சரின் துணையுடன் ஆக்கிரமிக்கப்பட்டு பள்ளிவாசல் கட்டுவதற்குரிய வேலைதிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இன்றுவரை தமிழ் மக்கள் தவிர்ந்த ஏனைய சகோதர மக்கள் வாழ்ந்திராத இத் தமிழர் கிராமத்தின் பெரும்பாலான நிலங்கள் அருகில் உள்ள மக்களுக்கு முறையற்ற வகையில் காணி அனுமதிப்பத்திரங்கள்,வெளிப்படுத்தல் உறுதிகள் அடாத்து காணி மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்பதை அயல்கிராமத்தின் பள்ளவாசல் கடிதம் உறுதிப்படுத்தியுள்ளது.


இந்தியாவில் இருந்து ஒரு சில குடும்பங்கள் மீளத் திரும்பிய நிலையில் இம்மக்களுக்கான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு ஆலயங்கள் அழிக்கப்பட்டு பள்ளிவாசல்கள் கட்டும் நடவடிக்கை எடுப்பது நாடு திரும்பும் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கையில் தடையை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


எல்லை நிர்ணயம் மூலம் குறித்த கிராமம் முற்றுமுழுதான தமிழர் வட்டாரத்தில் உள்வாங்கப்பட்டிருந்த ஒரு கிராமமாகும் ஆயினும் கடந்த சில வருடங்களில் முறையற்றவகையில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பக்கசார்புடைய இன ரீதியான சிந்தனை காணி நடவடிக்கையில் குறித்த தேர்தல் வட்டாரத்தில் தமிழ் மக்களை சிறுபாண்மை இனமாக மாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


முறையற்ற அரசியல் தலையீடு இனரீதியான பக்கசார்பான பிரதேச நிர்வாகம் போன்றவற்றால் பாரம்பரிய தமிழ் கிராமம் தனது மக்களின் காணிகளை இழந்துள்ளதுடன் பொதுக்காணியை பயன்படுத்த முடியாத அளவுக்கு அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகியுள்ளது.


ஆலயங்கள் இருந்த இடத்தில் பள்ளிவாசல்கள் அமைக்கும் நடவடிக்கை எடுப்பது என்பது வேண்டுமென்றே தமிழர் அடையாளத்தை சிதைப்பது போன்றுள்ளது. இன்னும் ஒருசில வருடத்தில் இக்கிராமம் அமைந்துள்ள உள்ளுராட்சி வட்டாரமானது தனது தமிழர் பிரதிநிதித்துவத்தை இழக்கும் என்பதில் எவ்வித மாற்றுகருத்தும் கிடையாது.


இவ்விடயம் தொடர்பில் ஒரு நடுநிலையான விசாரணை நடைபெற்று தங்களுடைய நிலமும் வாழ்வும் பாதுகாக்கபடவேண்டும் என்கின்ற கோரிக்கை மட்டுமே இம்மக்களிடம் இருந்துவருகின்ற இறுதி மூச்சாகும்.



வவுனியாவில் பறிபோகும் தமிழர் நிலம் திரைமறைவில் காய் நகர்த்தும் இராஜாங்க அமைச்சர்-வெளியான அதிர்ச்சி தகவல் Reviewed by Author on May 08, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.