கட்டப்பட்டு இடை நடுவே விடப்பட்ட தம்பனைக்குளம் சிறி முத்துமாரி அம்மன்
மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் உள்ள தம்பனைக்குளம் சிறி முத்துமாரி அம்மன் ஆலயம் கட்டப்பட்டு இடை நடுவே விடப்பட்ட நிலையில் தற்போது அந்த ஆலயம் ஆயிரம் கால் மண்டபம் போல் காட்சியளிப்பதாக அக்கோயிலுக்கு வரும் இந்து மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக தம்பனைபகுளம் சிறி முத்துமாரி அம்மன் ஆலய பொருளாளர் வி.செல்வக்குமார் அவர்களை இன்று தொடர்பு கொண்டு கேட்ட போது தெரிவிக்கையில்,,,
மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் ,மடு தம்பனைக்குளம் பகுதில் சிறி முத்துமாரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பிரதான வீதிக்கு அருகாமையிலேயே அமைந்துள்ளது.கடந்த காலங்களில் இந்த ஆலையம் தற்காலிக ஆலயமாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த ஆலயம் இருக்கத்தக்க பல்வேறு இந்து மக்களினதும்,நலன் விரும்பிகளினதும் நிதி உதவியுடன் குறித்த ஆலையம் கடந்த 5 வருடத்திற்கு முன் புதிதாக கட்ட ஆரம்ப வேலைகள் இடம் பெற்றது.
தற்போது குறித்த பணி நிதி பற்றாக்குறையின் காரணமாக இடை நடுவே நின்று விட்டது.தற்போது அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த இந்து மக்கள் குறித்த ஆலயத்திற்கு தரிசிக்க வந்து செல்லுகின்றனர்.
ஆனால் தற்போது உள்ள ஆலயத்தினுல் அதிகமான பக்தர்களை வைத்து ஆலைய நிகழ்வுகளை நடாத்த முடியாத நிலையில் ஆலய நிர்வாகத்தினர் காணப்படுகின்றனர். தற்போது 5 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட புதிய ஆலயத்தின் பணிகள் நிதி பற்றாக்குறையின் காரணமாக இடை நிறுத்தப்பட்ட நிலையில் காணப்படுவது தொடர்பில் எமது ஆலய நிர்வாக சபையினர் பல அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தம்பனைப்குளம் சிறி முத்துமாரி அம்மன் ஆலய பொருளாளர் வி.செல்வக்குமார் மேலும் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
November 14, 2012
Rating:
No comments:
Post a Comment